News December 31, 2024

EXCLUSIVE விருதுநகரில் 2024 வெடி விபத்தில் 45 பேர் பலி

image

விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலான பட்டாசு உற்பத்தி தொழில் தொடர் விபத்தால் ஆபத்து நிறைந்த தொழிலாக உள்ளது. 2024 ஆண்டில் இதுவரை 21 பட்டாசு வெடிவிபத்து ஏற்பட்டு 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக உயிர்பலி ஏற்பட்ட ஆண்டுகளில் 2024 ஆம் ஆண்டு 2வது இடத்தை பிடித்துள்ளது. முன்னதாக நாட்டை உலுக்கிய முதலிபட்டி பட்டாசு விபத்து ஏற்பட்ட 2012ல் 55 பேர் உயிரிழந்ததே அதிகபட்ச உயிர்பலி ஏற்பட்ட ஆண்டாக அமைந்துள்ளது.

Similar News

News November 6, 2025

விருதுநகர்: மின் வேலியில் சிக்கி 3 பேர் பலி

image

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் மட்டும் சட்டவிரோதமாக விவசாய தோட்டங்களில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். அக்.31 அன்று கோட்டைப்பட்டியில் முயல் வேட்டைக்கு சென்ற சுரேஷ் (45), இதேபோல் வேப்பிலைப்பட்டியில் மாயமான ரவிக்குமார் (40), சுரேஷ்குமார் (38), மின்வேலியில் சிக்கி பலியான நிலையில் சட்டவிரோத மின்வேலி அமைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News November 6, 2025

விருதுநகரில் துப்பாக்கியால் சுட்டு பிடித்த அதிகாரிகள்

image

காப்புக்காடுகள் பகுதியில் 3 கிமீ மேல் வரும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறைக்கு அனுமதி என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இதையடுத்து விருதுநகர் அருகே மன்னார்குடியில் பயிர்களை சேதப்படுத்திய 1 1/2 வயது காட்டுபன்றியை அக்.24 அன்று வனத்துறையினர் சுட்டு கொன்றனர். இதேபோல் நேற்று இரவு ஆவுடையாபுரத்தில் ஸ்ரீவி வனத்துறை அதிகாரி செல்வமணி தலைமையில் ஒரு காட்டுப்பன்றியை சுட்டு பிடித்தனர்.

News November 6, 2025

சிவகாசியில் சுட்டுப் பிடிக்க அனுமதிக்க கோரி மனு

image

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் சிவகாசி அருகே ஈஞ்சார் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களை தொடர்ந்து காட்டு பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, காட்டுப் பன்றிகளை சுடுவதற்கு ஆவண செய்திட வலியுறுத்தி சார் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

error: Content is protected !!