News April 14, 2025

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி 13 முறை அதிகரிப்பு

image

2014-ம் ஆண்டு முதல் பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு 13 முறை உயர்த்தி இருக்கிறது. கச்சா எண்ணெய் மதிப்பு குறைந்தபோதும்கூட 13 முறை கலால் வரியை உயர்த்தியுள்ளது. 3 முறை மட்டுமே குறைத்துள்ளது. ஜிஎஸ்டி வந்தபிறகு அனைத்து கலால் வரிகளும் பெட்ரோலிய பொருள்கள் மீதே விதிக்கப்படுகிறது. 2026 பட்ஜெட்டில் கலால் வரி மூலம் ரூ.3.17 லட்சம் கோடி திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

Similar News

News November 28, 2025

டியூட் படத்தில் ‘கருத்த மச்சான்’ பாடல் நீக்கம்!

image

இளையராஜா இசையமைத்திருந்த ‘கருத்த மச்சான்’ பாடலை டியூட் படத்தில் இருந்து நீக்க சென்னை HC உத்தரவிட்டுள்ளது. தனது அனுமதியின்றி, தனது பாடல்களை பயன்படுத்தப்பட்டுள்ளதாக இளையராஜா சென்னை HC வழக்கு தாக்கல் செய்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏற்கெனவே, இதே போல ‘ஒத்த ரூபாயும் தாரேன்’, ‘இளமை இதோ இதோ’, ‘என் ஜோடி மஞ்ச குருவி’ பாடல்களும் இது போல நீக்கப்பட்டிருந்தன.

News November 28, 2025

பூதக்கண்ணாடியில பாருங்க PM: செல்வப்பெருந்தகை

image

பிஹார் காற்று TN-ல் வீசுவதாக PM மோடி பேசியதற்கு செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். பிஹாரில் பாஜக குறுக்கு வழியில் வென்றதாகவும், அதை வைத்து அனைத்து மாநில தேர்தல் முடிவுகளையும் முடிவு செய்யக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், காங்., இரண்டாக உடையும் என PM பேசியதை குறிப்பிட்ட அவர், TN பாஜக எத்தனை கோஷ்டிகளாக உடைந்திருக்கிறது என்பதை PM பூதக்கண்ணாடி வைத்து பார்க்கவேண்டும் என கூறியுள்ளார்.

News November 28, 2025

வெள்ளி விலை ₹12,000 உயர்ந்தது

image

வெள்ளி விலை மீண்டும் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் கிலோவுக்கு ₹12,000 உயர்ந்தது. இன்று(நவ.28) கிராமுக்கு ₹3 அதிகரித்து ₹183-க்கும், கிலோவுக்கு ₹3,000 அதிகரித்து ₹1,83,000-க்கும் விற்பனையாகிறது. உலக சந்தையில் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதே, இந்தியாவில் விலை அதிகரிப்புக்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!