News April 25, 2025
6-9-ம் வகுப்புகளுக்கு தேர்வு நிறைவு.. விடுமுறை துவக்கம்

1-5 வகுப்பு மாணவர்கள் ஏப். 17 முதல் விடுமுறையில் உள்ளனர். 10,11, 12-ம் வகுப்பு மாணவர்களும் விடுமுறையில் உள்ளனர். இந்நிலையில், 6-9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேற்றுடன் தேர்வு முடிந்தது. இதனால் அவர்களுக்கும் இன்று முதல் விடுமுறை துவங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஜூன் 2-ம் தேதியும், கல்லூரிகள் ஜூன் 16-ம் தேதியும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 25, 2025
மோடி உங்களை தூங்க வைப்பார்; பாஜக தலைவர்

மோடி எதுவும் செய்ய மாட்டார், பிஹார் சென்று உரை நிகழ்த்துவதற்குப் பதிலாக அவர் காஷ்மீருக்குச் சென்றிருக்க வேண்டும். இப்போது நாம் நம்பிக்கை இழந்து வீட்டிற்குச் செல்வோம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், விஷயம் முடிந்துவிட்டது. மோடி, ‘அங்கு எதுவும் நடக்கவில்லை’ என்று சொல்லி உங்களைத் தூங்க வைப்பார் எனவும் அவர் சாடியுள்ளார்.
News April 25, 2025
ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

சாவர்க்கர் தொடர்பான அவதூறு வழக்கில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு SC கண்டனம் தெரிவித்துள்ளது. தியாகிகள் மீது அவதூறு கருத்துகளை இனியும் பேச நீதிமன்றம் அனுமதிக்காது எனவும்
‘உங்களின் விசுவாசமான ஊழியர்’ என்று ஆங்கிலேயர்களிடம் மகாத்மா காந்தி பேசியுள்ளது தெரியுமா என்றும் ராகுலுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. சுதந்திரம் வாங்கி கொடுத்தவர்களை அவதூறாக பேசுவதை ஏற்க முடியாது எனவும் SC தெரிவித்துள்ளது.
News April 25, 2025
பிரபல ஹாலிவுட் நடிகை லார் பார்க் லிங்கன் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகை லார் பார்க் லிங்கன் காலமானார். 45 ஆண்டுகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்த இவருக்கு வயது 63. அவருக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருந்த போதிலும், மரணத்திற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை. மிக பிரபலமான, ‘Friday the 13th’ மற்றும் ‘Knots Landing’ போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார் லார். இவர் அதிகமாக, நடித்திருப்பது பேய் படங்களிலும், தொடர்களிலும் தான். #RIP.