News March 15, 2025
தெலங்கானாவில் தேர்வு மையம் – கொந்தளித்த காங்.

<<15768647>>தெற்கு ரயில்வே<<>> பணிக்கான தேர்வெழுதும் தமிழக தேர்வர்கள் 90% பேருக்கு தெலங்கானாவில் மையம் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, ஒன்றிய அரசு எப்போதும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக சாடினார். தமிழக தேர்வர்கள் தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
Similar News
News March 15, 2025
214 பிணைய கைதிகள் சுட்டுக் கொலை: BLA அதிர்ச்சி தகவல்

214 ரயில் பயணிகளை சுட்டுக் கொன்று விட்டதாக பலுசிஸ்தான் விடுதலை படை (பிஎல்ஏ) தெரிவித்துள்ளது. பணயக் கைதிகள் குறித்து பாகிஸ்தானுக்கு 48 மணி நேர கெடு விதித்தும், பதில் அளிக்காததால் 214 பேரை கொன்று விட்டதாக பிஎல்ஏ கூறியுள்ளது. 400 பேருடன் சென்ற பயணிகள் ரயிலை பிஎல்ஏ அண்மையில் கடத்தியது. இதில் 33 பிஎல்ஏ அமைப்பினர் கொல்லப்பட்டதாகவும், 354 பயணிகள் மீட்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் கூறியிருந்தது.
News March 15, 2025
ஆண்களே, ரிலாக்ஸ் பிளீஸ்…

ஸ்ட்ரெஸ் அதிகமுள்ள ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் பாதிக்கப்படுவதாக ஆய்வில் உறுதியாகியுள்ளது. குழந்தையின்மைக்கான காரணங்களில் 40% ஆண்களிடமே உள்ளது. இந்நிலையில் வேலை மற்றும் பிற பிரச்னைகளால் மன அழுத்தத்துக்கு ஆளாகும் ஆண்களின் உடலில், டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் அளவு குறைவதாகவும், இது அவர்களின் விந்தணு தரத்தை பாதிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. ஆகவே, ஆண்களே டென்ஷன் ஆகாதீங்க. ரிலாக்ஸ் பிளீஸ்!
News March 15, 2025
கட்சியை விட்டு விலகும் செங்கோட்டையன்?

EPS – செங்கோட்டையன் இடையேயான பிளவு இன்று வெட்ட வெளிச்சம் ஆகிவிட்ட நிலையில், செங்கோட்டையனின் பேச்சு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. <<15773361>>தான் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அவர் எதைக் கூறியிருக்கிறார்<<>> என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கட்சியை விட்டு விலகி வேறு பாதையில் பயணிக்க இருக்கிறாரா, அல்லது கட்சிக்குள்ளேயே கலகம் செய்ய காத்திருக்கிறாரா? காலம் பதில் சொல்லும்.