News April 16, 2025
EX MLA மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

குளித்தலை தொகுதி EX MLA <<16112905>>கந்தசாமி<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அண்ணா தலைமையில் திமுக முதல்முதலில் ஆட்சியைப் பிடித்து அரசியல் களத்தில் பெரும் மாற்றத்துக்கு வித்திட்ட 1967 தேர்தலிலும், கருணாநிதி தலைமையில் 1971 தேர்தலிலும் குளித்தலையில் வென்றவர் கந்தசாமி எனக் கூறியுள்ளார். அவரின் குடும்பத்தினர், கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News October 20, 2025
நாமக்கல்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

நாமக்கல் மக்களே வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987 தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News October 20, 2025
தீபாவளியில் கர்ப்பிணி பெண்கள் கவனமா இருங்க

தீபாவளியன்று கர்ப்பிணிகள் முன்னெச்சரிக்கையாக இருக்க டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர் *கர்ப்பிணி பெண்கள் வீட்டில் இருந்தால், அதிக சத்தம் & புகையை உண்டாக்கும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள். இவை சுவாசப் பிரச்னைகளை உருவாக்கும் *கர்ப்பிணிகள் பட்டாசு வெடிக்க ஆசைப்பட்டால் குறைந்த சத்தம் & புகையை உருவாக்கும் பட்டாசுகளை முகமூடி அணிந்து எரிப்பது நல்லது *விளக்கு ஏற்றும் போது விழிப்புடன் இருக்க வேண்டும்.
News October 20, 2025
தீபாவளிக்கு ஜனாதிபதி வைத்த கோரிக்கை

தீபாவளியையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். அறியாமையின் மீது அறிவின் வெற்றியை இந்த பண்டிகை குறிப்பதாக கூறிய அவர், மக்களிடையே அன்பு மற்றும் சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். மேலும், இப்பண்டிகையை பொறுப்பாகவும், சுற்றுசூழலுக்கு தீங்கிழைக்காமலும் கொண்டாட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.