News June 25, 2024

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமறைவு?

image

நில அபகரிப்பு வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ₹100 கோடி மதிப்பிலான சொத்துகளை போலி ஆவணம் மூலம் அபகரிப்பு வழக்கில் கைதாவதில் இருந்து தப்பிக்க, அவர் தாக்கல் செய்திருந்த முன் ஜாமின் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, கைது நடவடிக்கைக்கு பயந்து அவர், தற்போது தலைமறைவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

Similar News

News August 22, 2025

முடிவுக்கு வரும் இஸ்ரேல் போர்? நெதன்யாகு உத்தரவு

image

இஸ்ரேல் – ஹமாஸ் போரால் காசா பகுதியில் மக்கள் பெருந்துயரத்தில் உள்ளனர். இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க இருப்பதாகவும் அவர் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இஸ்ரேல், காசா நகரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான திட்டங்களை செயல்படுத்தும் என்றார்.

News August 22, 2025

உங்க பணம் Dream 11 அக்கவுண்ட்டில் இருந்தால்…

image

ஆன்லைன் <<17474129>>கேமிங் <<>>சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, Dream 11 தனது அனைத்து பயன்பாடுகளையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இப்போது பணம் Dream 11 அக்கவுண்டில் இருந்தால், என்ன செய்வது என பலரும் தவித்து வரும் நிலையில், அதுகுறித்து Dream 11 விளக்கமளித்துள்ளது. அக்கவுண்டில் எவ்வளவு பணம் உள்ளதோ, அதனை அப்படியே வங்கி கணக்குக்கு மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News August 22, 2025

BREAKING: தங்கம் விலை குறைந்தது

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக.22) சவரனுக்கு ₹120 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,215-க்கும், சவரன் ₹73,720-க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹400 அதிகரித்திருந்த நிலையில், இன்று மீண்டும் சரிவைக் கண்டுள்ளது.

error: Content is protected !!