News January 25, 2026
EX-LOVER-ன் மனைவிக்கு HIV ரத்தத்தை ஏற்றி பெண் REVENGE

ஆந்திராவின் கர்னூலை சேர்ந்த வசுந்தரா என்பவர், பழிவாங்கும் நோக்கில் EX காதலன் மனைவிக்கு HIV ரத்தத்தை செலுத்திய அதிர வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்ததை வசுந்தராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் காதலன் மனைவி பைக்கில் செல்லும்போது திட்டமிட்டே விபத்தை ஏற்படுத்தி, அவருக்கு உதவி செய்வது போல், ஊசி மூலம் HIV ரத்தத்தை செலுத்திவிட்டு வசுந்தரா தப்பியுள்ளார்.
Similar News
News February 12, 2026
புதிய கட்சி முடிவில் அண்ணாமலை: சபாபதி மோகன்

தேர்தலுக்குள் அண்ணாமலை புதிய கட்சியைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக திமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சபாபதி மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தன்னை மேலும் பிரபலப்படுத்தவே அண்ணாமலை அடிக்கடி தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுப்பதாகவும், பாஜகவில் அவரது நாள்கள் எண்ணப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். ஏற்கெனவே இந்த பேச்சு எழுந்தபோது, அப்படி ஒரு திட்டம் இல்லை என அண்ணாமலை கூறியிருந்தார்.
News February 12, 2026
260 பேர் பலியான விமான விபத்து.. இதுதான் காரணமா?

2025-ல் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானம் விபத்தை அதனை இயக்கிய பைலட் செய்திருக்கலாம் என தகவல் கசிந்துள்ளது. முன்னதாக இதை விசாரித்த புலனாய்வு பிரிவு, தொழில்நுட்ப கோளாறால் இது நடந்திருக்கலாம் என கணித்தது. ஆனால் தற்போது பிளாக் பாக்ஸை ஆய்வு செய்தபிறகு, மன அழுத்தத்தில் இருந்த கேப்டன் சுமீத் விமானத்தின் எரிபொருளை நிறுத்தியிருக்கலாம் என தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது.
News February 12, 2026
ரூபாய் நோட்டுகளில் ஏன் இந்த கோடுகள் உள்ளன தெரியுமா?

இந்த கோடுகளை Bleed marks என்பார்கள். இவை பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக வடிவமைக்கப்பட்டது. இவற்றை தொடுவதன் மூலம் நோட்டின் மதிப்பை அறிய முடியும். ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் வெவ்வேறு வகையான அடையாளங்கள் உள்ளன *₹100 நோட்டில் ஒவ்வொரு விளிம்பிலும் 4 கோடுகள் இருக்கும் *₹200 நோட்டில் 4 கோடுகளும், நடுவில் 2 சிறிய வட்டங்கள் இருக்கும் *₹500 நோட்டில் ஒவ்வொரு பக்கத்திலும் 5 சாய்ந்த கோடுகள் இருக்கும். SHARE IT.


