News August 31, 2025
MLC உறுப்பினராகிறார் Ex கிரிக்கெட் வீரர் அசாருதீன்

முன்னாள் கிரிக்கெட்டர் அசாருதீன் தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினராக (MLC) தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவரை Governor Quota-வின் கீழ் பரிந்துரைக்க முடிவெடுத்துள்ளது. இது குறித்து அசாருதீன் வெளியிட்டுள்ள பதிவில், காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து, ஒருமைப்பாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் மாநிலத்திற்கு சேவை செய்வேன் என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News September 1, 2025
ரேஷன் கார்டு விஷயத்தில் இப்படி மட்டும் செய்யாதீங்க..!

புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் தவறான முகவரி கொடுப்பது, குடும்ப உறுப்பினர்கள் குறித்து தவறான விவரங்கள் கொடுப்பது. கேஸ் சிலிண்டர் இருப்பதை மறைத்தல் உள்ளிட்டவற்றை தவிர்க்கவும். அவ்வாறு செய்தால், 1955 அத்தியாவசிய பண்ட சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம். இதனை மீறினால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படலாம். அதனால், கவனமாய் விண்ணப்பியுங்கள்!
News September 1, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் விலகல்?

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மீண்டும் அதிருப்தியில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கெனவே EPS மீது அதிருப்தியில் இருந்த அவரை, தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சமாதானம் செய்தனர். இந்நிலையில், அவர் தனது முடிவு குறித்து செப்.5-ம் தேதி கோபிச்செட்டிபாளையத்தில் பேசவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் சமாதானப் புறா பறக்குமா?
News September 1, 2025
UPI ஃபெயில் ஆயிடுச்சா? இத ட்ரை பண்ணுங்க

ஓட்டலில் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு, UPI மூலம் பணம் அனுப்பினால், transaction பெயில் என மெசெஜ் வரும். உடனே கடைக்காரர் சூடாக நம்மளை பார்ப்பார். இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் இருந்து தப்பிக்க, 1)வேறொரு UPI ஆப்பில் முயற்சி செய்யலாம் 2)நெட் பேங்கிங் பயன்படுத்தலாம் 3)கடைகளுக்கு செல்லும் போது கையில் கொஞ்சம் காசு வைத்து கொள்ளலாம். 4)டெபிட்/ கிரெடிட் கார்டுகளை உபயோகிக்கலாம். SHARE IT.