News January 10, 2025
EX.அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமான சொத்துகளை சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால் விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை, வழக்கு நடைபெற்று வரும் மாவட்ட சார்பு நீதிமன்ற நீதிபதி விடுமுறை சென்றுள்ளதால் வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Similar News
News August 27, 2025
புதுக்கோட்டை: விநாயகர் சதுர்த்தியில் இத பண்ணுங்க..

➡️ நினைத்த காரியம் நிறைவேற விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டியவை
➡️ வீட்டை சுத்தம் செய்து, விநாயகர் சிலையை நிறுவ வேண்டும்
➡️ பூ மாலைகளால் அலங்கரிக்க வேண்டும்
➡️ 108 முறை “ஓம் கம் கணபதியே நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி வழிபடலாம்
➡️ வழிபடும் நேரம்: காலை 07.45 – 08.45 மற்றும் காலை 10.40 – 01.10 வரை
➡️ அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கும் சென்று வழிபடலாம்
➡️ இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
News August 27, 2025
புதுகையில் மானிய உரங்களை விற்பனை செய்தால் உரிமம் ரத்து

புதுகை மாவட்டத்தில் உர விற்பனையில் விதிகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் இணை இயக்குநர் சங்கரலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, “மானிய உரங்களை விற்பனை செய்யும்போது, விற்பனை முனையக்கருவி மூலம் மட்டுமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது. உரிமத்தை புதுப்பிக்காமல் உரங்களை விற்பனை செய்தால் நடவடிக்கை என்படும் என கூறியுள்ளார்.
News August 27, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.,26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.