News December 12, 2025
Ex அமைச்சர் காலமானார்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் <<18539967>>சிவராஜ் பாட்டீல்<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பொதுவாழ்வில் அரை நூற்றாண்டு காலம் அனுபவம் கொண்ட அவர், மக்களவை தலைவர், கவர்னர் உள்ளிட்ட பொறுப்புகளில் திறம்பட செயலாற்றியவர் என ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். கருணாநிதி மீது பெரும் அன்பும் மரியாதையும் கொண்டு நட்பு பாராட்டிய சிவராஜ் பாட்டீலின் மறைவு வேதனை தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 8, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.7) இரவு 10 முதல் இன்று (ஏப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News April 8, 2026
கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறை கூட்ட நெரிசலை தவிர்க்க எர்ணாகுளம் – முசாபர்பூர் இடையே கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் (06085/06086) இயக்கப்பட உள்ளன. எர்ணாகுளத்தில் இருந்து ஏப்ரல் 10, 17, 24 ஆகிய தேதிகளிலும், முசாபர்பூரில் இருந்து ஏப்ரல் 13, 20, 27 ஆகிய தேதிகளிலும் இந்த ரயில்கள் புறப்படும். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்படி வழியாக செல்லும்.
News April 8, 2026
NDA கூட்டணிக்கு ஆட்சிக்கு வந்தால்? ஸ்டாலின்

தமிழகத்தை சீரழிக்க பல திட்டங்களை NDA கூட்டணி தீட்டியிருப்பதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். NDA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கான இலவச பேருந்து திட்டம், விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை நிறுத்திவிடுவார்கள் என்றும் தமிழை அழிக்க மும்மொழி கல்விக் கொள்கை, ஒரே நாடு ஒரே தேர்தலை செயல்படுத்திவிடுவார்கள் எனவும் அவர் கூறினார். இவற்றையெல்லாம் தடுக்க திமுகவால் மட்டுமே முடியும் என்றும் தெரிவித்தார்.


