News November 28, 2024
ICU-வில் EVKS இளங்கோவன்

EVKS இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனதாகவும், திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், டிச.9ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவையில், இளங்கோவன் உரையாற்றுவார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News August 20, 2025
விஜய்யா? பாஜகவா? கூட்டணி யாருடன்: OPS பதில்

விஜய்யுடன் கூட்டணி வைப்பது குறித்து யாரும் தன்னை தொடர்புக்கொள்ளவில்லை என இபிஎஸ் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உங்களை அண்ணன் என அழைத்துள்ளாரே என கேட்டதற்கு, தன்னை அண்ணன் என அழைத்தால் அவர் தனக்கு தம்பி என்றார். பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா என கேட்டதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என பதிலளித்தார்.
News August 20, 2025
ரால்ப் வால்டோ எமர்சனின் பொன்மொழிகள்

* ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வது அறிவு. ஒவ்வொரு நாளும் எதாவது ஒன்றை விட்டுவிடுவது ஞானம்.
*தோல்விகள் தங்கள் வெற்றிகளுக்கான முன்னேற்பாடு என்பதை உணரும்போது மனிதர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
* உங்களை வேறு ஏதாவது ஒன்றாக மாற்றியமைக்க முயற்சிக்கும் இவ்வுலகில், நீங்கள் நீங்களாக இருப்பதே சாதனைதான்.
* சிறந்த நபரை தேர்ந்தெடுக்காதீர்கள், உங்களை சிறந்த நபராக மாற்றக்கூடிய நபரைத் தேர்ந்தெடுங்கள்.
News August 20, 2025
50-வது திருமண நாள்: வாழ்த்தியவர்களுக்கு CM நன்றி

CM ஸ்டாலின் தனது 50-வது திருமணநாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் ஸ்டாலின் X பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், உயிரென உறவென துர்கா தன்னில் பாதியாய் இணைந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், இத்தருணத்தில் இல்லம்தேடி வந்து தங்களை வாழ்த்திய தோழமை இயக்க தலைவர்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.