News May 24, 2024

அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்: கெஜ்ரிவால்

image

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தன்னிடம் ஆதாரம் இல்லை என பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்த வழக்கில் சஞ்சய் சிங், மணீஷ் சிசோடியாவுடன் தன்னையும் கைது செய்து 500க்கும் மேற்பட்ட விசாரணைகள் நடத்தியிருந்தாலும், ஒரு பைசா கூட மீட்கப்படவில்லை என்றார். இதன் மூலம் இது பொய் வழக்கு என்பது நிரூபணமாகியுள்ளதால், அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News March 16, 2026

திமுகவினரை கண்டாலே கோபம் எழுகிறது: நயினார்

image

காட்டுமன்னார்கோவில் அரசு ஹாஸ்பிடலின் பிரசவ வார்டுக்குள் புகுந்து, கஞ்சா போதை ஆசாமிகள் அரிவாளை காட்டி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். திமுகவின் அவல ஆட்சியில், பெட்டிக்கடைகளில் கூட போதைப்பொருள்கள் கிடைப்பதாகவும், இதையெல்லாம் மறைத்துவிட்டு ’போதை நடமாட்டமே இல்லை’ என வாய்கூசாமல் விளம்பரப்படுத்தி வரும் திமுகவினரை கண்டாலே கடும் கோபம் எழுகிறது எனவும் சாடியுள்ளார்.

News March 16, 2026

தமிழகத்தில் 5 பேருக்கு மட்டும் ஒரு வாக்குச்சாவடி!

image

சட்டப்பேரவைத் தேர்தலில் தேனியின், வருசநாடு வாக்குச்சாவடி அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. வெள்ளிமலை அடர் வனப்பகுதியில் உள்ள துரைச்சாமி மரகதம் பள்ளியில், செந்தில், ஜெயராணி, பவுல், சுதா, ரோகித் ஆகிய 5 பேருக்கு மட்டும் தனியாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் திருவிழாவில் தகுதியுள்ள அனைவருக்கும் வாக்குரிமையை உறுதி செய்யவே இந்த ஏற்பாடு செய்துள்ளதாக CEC ஞானேஷ் குமார் நேற்று குறிப்பிட்டிருந்தார்.

News March 16, 2026

விஜய்யின் மனைவியை வைத்து அரசியல் செய்யும் திமுக: KTR

image

விஜய்யின் மீது அவரின் மனைவியை வைத்தே வழக்கு தாக்கல் செய்து, ஊடகங்களில் விவாதமாக்கி கேலிப்பொருளாக்கும் செயலை திமுகவினர் செய்வதாக ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். இதுபோன்ற இழிவான அரசியலை செய்யக்கூடாது எனக் கூறிய அவர், அரசியலுக்கு வந்துள்ள விஜய்யிடம் அரசியல் ரீதியாக மோத வேண்டும்; அதைவிடுத்து குடும்பத்தை பற்றி பேசுவதை அதிமுகவும், மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!