News September 14, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் ▶குறள் எண்: 52 ▶குறள்: மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். ▶பொருள்: இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.
Similar News
News October 26, 2025
இசைத்துறையிலும் கால் பதிக்கும் AI!

இதுவரை புகைப்படங்கள், வீடியோக்களை உருவாக்கி வந்த AI, தற்போது இசைத்துறையிலும் கால் பதிக்க உள்ளது. எழுத்து மற்றும் ஆடியோ குறிப்புகளில் இருந்து இசையை உருவாக்கும் புதிய AI Tool-ஐ OpenAI உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, USA-ல் உள்ள புகழ்பெற்ற ஜூலியார்ட் கலை பள்ளி மாணவர்களுடன் OpenAI ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இசைத்துறையினர் கலக்கத்தில் உள்ளனர்.
News October 26, 2025
KKR அணிக்கு அபிஷேக் நாயர் பயிற்சியாளர்

KKR அணியின் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 ஐபிஎல் சாம்பியனான KKR, கடந்த சீசனில் 5 போட்டிகளில் மட்டுமே வென்று 8-வது இடத்தை பிடித்தது. இதன் காரணமாக பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து சந்திரகாந்த் பண்டிட் விலகினார். இந்நிலையில், அணியில் பல அதிரடி மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ள KKR நிர்வாகம், முதற்கட்டமாக அபிஷேக் நாயரை பயிற்சியாளராக நியமிக்கவுள்ளது.
News October 26, 2025
அதிகம் காலடி படாத சுற்றுலா தளங்கள்

ரம்மியமான இயற்கை சூழலை கொண்ட ஏராளமான இடங்கள் தென்னிந்தியாவில் உள்ளன. இங்கு அதிகளவிலான மக்கள் செல்வதில்லை. ஆனால், இந்த இடங்களுக்கு கட்டாயம் ஒருமுறை செல்ல வேண்டும். இங்கு உள்ள இயற்கை சூழல் நம்மை பிரமிக்க வைக்கும். அது எந்தெந்த இடங்கள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்கள் செல்ல விரும்பும் இடம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.


