News August 26, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: அறன்வலியுறுத்தல்
▶குறள்: மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற.
▶பொருள்: மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.
Similar News
News December 26, 2025
சேலம் ரயில்வே: LHB பெட்டி ரயிலாக மாற்றம்!

சேலம் மாவட்டம் ரயில் நிலையம் வழியே இயக்கப்படும் சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வண்டி எண் (12695/12696) வரும் பிப்.03- ஆம் தேதி முதல் LHB பெட்டி ரயிலாக மாற்றி இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.
News December 26, 2025
ஜன.20-ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது

2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.20-ல் கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். கவர்னர் ஒப்புதலுடன் காலை 9:30 மணிக்கு பேரவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக அரசு தயாரித்து வழங்கும் உரையை கவர்னர் ஆர்.என்.ரவி வாசிக்கவுள்ளார். அன்றே சட்டமன்ற அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் என்றும் அப்பாவு கூறியுள்ளார்.
News December 26, 2025
அஜிதா விவகாரத்தில் விஜய் செய்ய தவறியது: தமிழிசை

பெண்களுக்கு அரசியல் என்பது எப்போதும் ஒரு போராட்டமாகவே இருக்கிறது என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தவெக நிர்வாகி அஜிதா தற்கொலைக்கு முயன்றதை பற்றி பேசிய அவர், விஜய் முன்னதாகவே அவரை அழைத்து பேசியிருக்க வேண்டும் என பேசியுள்ளார். மேலும், அஜிதா தற்கொலைக்கு முயன்றது கவலையளிப்பதாகவும் அவரது போராட்டம் வெற்றியடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


