News March 22, 2024
தினம் ஒரு திருக்குறள்

◾பால்: அறத்துப்பால்
◾ இயல் : இல்லறவியல்
◾அதிகாரம்: பொறையுடைமை
◾குறள்: 155
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
◾விளக்கம்: தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.
Similar News
News April 19, 2025
IPL 2025: DC முதலில் பேட்டிங்

IPL 2025-ல் அகமதாபாத்தில் நடைபெறும் மேட்ச்சில், GT அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதுவரை இரு அணிகளும் 5 முறை மோதியுள்ளன. அவற்றில் 3-ல் DC-யும், 2-ல் GT-யும் வெற்றி பெற்றுள்ளன. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவாங்க என நினைக்குறீங்க?
News April 19, 2025
₹49,000 வரை சம்பளம்.. மத்திய அரசில் 200 காலியிடங்கள்!

மத்திய அரசின் இந்தியா நிலக்கரி நிறுவனத்தில் இருக்கும் 200 டெக்னீசியன் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு, 18 முதல் 30 வயதுக்குட்பட்ட 10வது, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு நடைபெறும். மாதம் ₹49,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு மே 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
News April 19, 2025
மதிமுகவினருக்கு துரை வைகோ எம்.பி. வேண்டுகோள்

மதிமுக முதன்மை செயலாளர் பதவியிலிருந்து விலகிய <<16147444>>துரை வைகோ<<>> எம்பி, 3 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 20ம் தேதி நடைபெறும் நிர்வாகக் குழு கூட்டத்தில் மட்டுமே பங்கேற்பேன், பிறகு முக்கிய கூட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். 7 ஆண்டாக தான் மேற்கொண்ட முயற்சிகளை நிர்வாகிகள் தொடர வேண்டும், எந்த சூழலிலும் வைகோ மனம் கலங்கி விடாமல் பாதுகாக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார்.