News May 17, 2024
தினம் ஒரு திருக்குறள்

◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: கடவுள் வாழ்த்து
◾ குறள் : 4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
◾விளக்கம்:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை
Similar News
News January 7, 2026
விஜய்யை மறைமுகமாக சீண்டிய உதயநிதி

விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக தவெகவை விமர்சிப்பது DCM உதயநிதி ஸ்டாலினின் வாடிக்கையாகிவிட்டது. அந்தவகையில் புதிது புதிதாக யார்(விஜய்) வேண்டுமானாலும் வரலாம் எனவும் ஆனால் அவர்கள் எல்லாம் அட்டைதான், காற்று அடித்தால் பறந்துவிடுவார்கள் என்றும் சாடியுள்ளார். மேலும் பாஜக உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் பணிந்து போக இது அதிமுக இல்லை என்றும் உதயநிதி தெரிவித்துள்ளார்.
News January 7, 2026
வரலாற்றில் இன்று

*1938 – நடிகை சரோஜாதேவி பிறந்த தினம்.
*1953 – இயக்குநர் பாக்யராஜ் பிறந்தநாள்
*1959 – பிடல் காஸ்ட்ரோவின் அரசை USA அங்கீகரித்தது.
*1972 – பின்னணி பாடகர் எஸ்.பி.சரண் பிறந்தநாள்
*1980 – மீண்டும் இந்திரா காந்தி தலைமையிலான ஆட்சி அமைந்தது.
News January 7, 2026
‘பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக கிரிக்கெட் மாற்றம்’

Modern Day கிரிக்கெட் முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது என டெஸ்ட் ஜாம்பவான் நீல் ஹார்வே கூறியுள்ளார். மணிக்கட்டை சுழற்றி பந்தை தட்டினாலே பவுண்டரி செல்லும் அளவிற்கு சக்திவாய்ந்த Bats பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். பல பலவீனமான அணிகள் சர்வதேச போட்டிகளில் ஆடுவதாகவும், அவர்களுக்கு எதிராக தானும் விளையாடி இருக்கலாம் என ஆசைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி உங்க கருத்து?


