News March 20, 2024
தினம் ஒரு திருக்குறள்

◾பால்: அறத்துப்பால்
◾ இயல் : இல்லறவியல்
◾அதிகாரம்: ஒழுக்கமுடைமை
◾குறள்: 138 நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.
◾விளக்கம்: நல்லொழுக்கம், அறமாகிய நன்மைக்கு வித்தாக அமைந்து இம்மை மறுமையிலும் இன்பம் தரும்; தீயொழுக்கமோ துன்பமே தரும்.
Similar News
News September 8, 2025
செங்கோட்டையனுக்கு ByeBye… அந்தர் பல்டி அடித்த MLA

கடந்த ஒருவாரமாக செங்கோட்டையனுடன் கூடவே இருந்த பவானி MLA பண்ணாரி, திடீர் திருப்பமாக EPS-க்கு ஆதரவு அளித்துள்ளார். செங்கோட்டையன், உள்ளிட்ட 9 பேர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே.செல்வராஜை பண்ணாரி சற்றுமுன் சந்தித்தார். அதன்பின் அவர் பேசுகையில், இயக்கம் தான் பெரியது, தனிநபர் அல்ல; EPS-க்கு துணை நிற்போம் என அந்தர்பல்டி அடித்துள்ளார்.
News September 8, 2025
நாஞ்சில் விஜயன் மீது PHOTO ஆதாரத்துடன் திருநங்கை புகார்

விஜய் டிவி-யின் ‘கலக்கப்போவது யார்’ ஷோ மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன். இந்த நிலையில், தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி ஏமாற்றிவிட்டதாக அவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், புகைப்பட ஆதாரங்களுடன் திருநங்கை புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால், அவர் யார் என்றே தெரியாது என நாஞ்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 8, 2025
ஆதாரை 12வது ஆவணமாக ஏற்க வேண்டும்: SC

வாக்காளர் பட்டியலில் ரேஷன் கார்டு உள்ளிட்ட 11 ஆவணங்கள் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 12-வது ஆவணமாக ஆதாரை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என SC உத்தரவிட்டுள்ளது. ஆதாரை ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆதாரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான வழிமுறை வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.