News May 1, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை
▶குறள் எண்: 132
▶குறள்: பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
▶பொருள்: எந்தெந்த வழிகளில் ஆராய்ந்து பார்த்தாலும், வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை. அதனை, எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் காக்க வேண்டும்.

Similar News

News March 21, 2026

கரூரில் ஜன நாயகன் ஷூட்டிங்கா? தவெக பதில்

image

கரூர் அசம்பாவிதத்தின்போது ‘ஜன நாயகன்’ பட ஷூட்டிங் எடுக்கப்பட்டதாக சில <<19420433>>வீடியோக்கள் <<>>வைரலாகி ஹாட் டாபிக்காக மாறியது. இந்நிலையில், அடிப்படை அறிவு உள்ளவர்களுக்கு அங்கு ஷூட்டிங் நடந்ததா என்பது தெரியும் என்று CTR நிர்மல் குமார் பதிலளித்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் புரோக்கர்கள் ஏதாவது பேசுவார்கள் என்ற அவர், இந்த விஷயத்தை தாங்கள் அரசியலாக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

News March 21, 2026

ஒரே கோயிலில் 3 ரூபங்களில் காட்சி தரும் சிவன்

image

பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர் என 3 ரூபங்களில் சீர்காழி சட்டைநாத சுவாமி கோயிலில் ஈசன் காட்சியளிக்கிறார். 3 அடுக்குகளைக் கொண்ட குன்றுக்கோயிலாக இக்கோயில் விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். நடு அடுக்கில், தோணியப்பர் உள்ளார். 3-வது தளத்தில் சட்டநாதராக இறைவன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

News March 21, 2026

தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்றும் பல மடங்கு சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் தங்கம் $108 (₹10,157) குறைந்து $4,494-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் 1 அவுன்ஸ் $3 குறைந்து $68-ஆக உள்ளது. சென்னையில், தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ₹400 உயர்ந்த நிலையில் இன்று குறைய வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!