News March 18, 2024
தினம் ஒரு திருக்குறள்

◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: அடக்கமுடைமை
◾குறள்: 123
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்.
◾விளக்கம்: அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.
Similar News
News December 22, 2025
விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் (PHOTOS)

தவெக சார்பாக இன்று மாமல்லபுரத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், அக்கட்சியின் தலைவர் விஜய், குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். இந்த விழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற 1000-க்கும் மேற்பட்டோருக்கு ஸ்பெஷல் கிறிஸ்துமஸ் கிப்டுகள் வழங்கப்பட்டன. மேலே, விழாவின் போட்டோக்களை, உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.
News December 22, 2025
திமுக தேர்தல் அறிக்கை.. கனிமொழி கொடுத்த ஹிண்ட்

தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என MP கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும் மகளிர் உரிமை, மாநில உரிமை, விவசாயிகளின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை தேர்தல் அறிக்கையின் மையக் கருத்தாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் இன்று அறிவாலயத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
News December 22, 2025
தேர்தல் ரேஸில் முந்துகிறதா திமுக?

2026 தேர்தலுக்கு சில மாதங்களே இருந்தாலும் அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யமுடியாமல் உள்ளன. அதேநேரம் திமுக கூட்டணியில் தொடர்வதை காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உறுதி செய்துவிட்டன. <<18592144>>தேர்தல் அறிக்கை தயாரிப்பு<<>>, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை என அடுத்த கட்டத்தை நோக்கி திமுக தலைமை நகர்கிறது. இதனால் தேர்தல் ரேஸில் திமுக முந்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


