News November 24, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் ▶குறள் எண்: 108 ▶குறள்: நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. ▶பொருள்: ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல. அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.
Similar News
News December 7, 2025
இண்டிகோ CEO-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய DGCA

இண்டிகோ பிரச்னை தொடர்பாக விளக்கம் கேட்டு அந்நிறுவனத்தின் CEO பீட்டர் எல்பர்ஸுக்கு DGCA நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விமானங்கள் ரத்துக்கான காரணம், பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யாதது, உள்ளிட்டவை குறித்து 24 மணி நேரத்திற்குள் அவர் பதிலளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரத்திற்கு உரிய ஏற்பாடுகளை செய்யாமல், இப்பிரச்னையில் பீட்டர் எல்பர்ஸ் கடமை தவறி இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
News December 7, 2025
வீட்டில் பாசிடிவ் எனர்ஜி வேணுமா? இந்த செடி வளருங்க

வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க சில வாஸ்து செடிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த செடிகள் அமைதி, நல்வாழ்வு மற்றும் செழிப்பை வழங்குகின்றன. அவை எந்தெந்த செடிகள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், வேறு ஏதேனும் செடி உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.
News December 7, 2025
பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகள்.. பறந்தது முக்கிய உத்தரவு

பள்ளிகளில் இணை நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, *கலை, பண்பாடு, பாரம்பரியம் சார்ந்த விழாக்கள் நடைபெறும்போது, மாணவர்களின் பாதுகாப்புக்காக அவசர வழிகள் இருக்க வேண்டும். *விழா ஒருங்கிணைப்பு குழுவில் அனைத்து மதம் சார்ந்தவர்களும் இருக்க வேண்டும். *நிகழ்ச்சியில் இடம்பெறும் ஒளி, ஒலிப் பாடல்கள் கண்ணியம் மிக்கவையாக இருக்க வேண்டும். SHARE IT.


