News September 28, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶ குறள் பால்: அறத்துப்பால் ▶ அதிகாரம்: மக்கட்பேறு. ▶ குறள் எண்: 66 ▶ குறள்: குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். ▶ பொருள்: தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.
Similar News
News October 19, 2025
காலை 10 மணி வரை 24 மாவட்டங்களில் மழை: IMD

நெல்லை, விருதுநகர், தேனி, குமரி, தென்காசி மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. மேலும், நீலகிரி, கோவை, தூத்துக்குடி, மதுரை, ஈரோடு, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, மயிலாடுதுறை, தி.மலை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
News October 19, 2025
பிஹார் தேர்தல்: நடிகையின் வேட்புமனு நிராகரிப்பு

பிஹார் தேர்தலில் போஜ்புரி நடிகை சீமா சிங்கின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாக வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிராக் பஸ்வானின் LJP (RV) கட்சி சார்பாக அவர் போட்டியிட இருந்தார். சிறிய தவறால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், மறுபரிசீலனைக்காக மீண்டும் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
News October 19, 2025
ரஷித் கானின் செயலால் பாகிஸ்தான் அதிர்ச்சி

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 ஆப்கன் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பலியான சம்பவத்தை கடுமையாக சாடியிருந்தார் ரஷித் கான். இதன் தொடர்ச்சியாக தன்னுடைய X-ன் பயோவில் இருந்த Lahore Qalandars அணியின் பெயரை நீக்கியுள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் தான் இடம்பெற்றிருந்த அணியின் பெயர்தான் Lahore Qalandars. இதனால், PSL-ல் அவர் இனி விளையாடமாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.