News March 17, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: இனியவை கூறல்
◾குறள்: 96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
◾விளக்கம்: பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.

Similar News

News November 17, 2025

நெல்லை: வாடகை வீட்டில் குடியிருப்போர் கவனத்திற்கு.!

image

நெல்லை மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் நெல்லை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000476, 9445000477, 9445000478) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News November 17, 2025

2 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க.. Alert

image

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று மதியத்திற்கு மேல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. அதேபோல், குமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 17, 2025

தெலங்கானா சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

image

தெலங்கானா சபாநாயகர் பிரசாத் குமாருக்கு SC கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 2023 தேர்தலில், காங்கிரஸ் வென்று ஆட்சியமைத்த போது, BRS கட்சியின் 10 MLA-க்கள் அக்கட்சிக்கு தாவினர். அவர்களை தகுதியிழப்பு செய்யக் கோரும் BRS-ன் மனு மீது, SC ஆணையிட்டும் சபாநாயகர் செயல்படவில்லை. இதையடுத்து, ஒரு வாரத்தில் முடிவெடுக்காவிட்டால், புத்தாண்டில் எங்கு இருப்பது என்பது உங்கள் கையில் என சபாநாயகரை SC எச்சரித்துள்ளது.

error: Content is protected !!