News August 10, 2024
தினம் ஒரு திருக்குறள்!

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: வான்சிறப்பு ▶குறள் எண்: 18 ▶குறள்: சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. ▶பொருள்: மழை பொழியாமல் பொய்த்துப் போனால், தமிழ் இலக்கியம் கூறும் திணை நிலத்தலைவனான இந்திரன் முதலான மண்ணின் கடவுளர்களுக்கு மக்கள் வழிபாடு எதையும் செய்ய மாட்டார்கள்.
Similar News
News January 2, 2026
நேதாஜி பொன்மொழிகள்!

*வன்முறை என்பது மோசமானது தான். ஆனால், அடிமைத்தனம் வன்முறையை காட்டிலும் மோசமானது *உண்மையான நண்பனாக இரு அல்லது பகைவனாக இரு, துரோகியாகவோ அல்லது பாதி நம்பிக்கைக்கு உரியவனாகவோ இருக்காதே *உண்மையும் நேர்மையும் உள்ளவனாக இருந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக வாழலாம் *கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதிவெற்றிக்கு உரியவர்கள் *வெற்றி தோல்வி முக்கியமில்லை, துணிந்து சண்டையிடுவதுதான் முக்கியம்
News January 2, 2026
இந்தியாவில் புல்லட் ரயில்.. வந்தது அறிவிப்பு

நாட்டின் முதல் புல்லட் ரயில், 2027-ம் ஆண்டு ஆக.15-ல் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இயங்கும் வகையில் மும்பை-அகமதாபாத் இடையே 508 கிமீ., தூரத்திற்கு பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக சூரத் முதல் பிலிமோரா வரையில் ரயில் சேவை தொடங்கும் என கூறியுள்ளார். 2023-ல் முடிவடைய வேண்டிய பணிகள், 4 ஆண்டுகள் தாமதமாகியுள்ளன.
News January 2, 2026
டெம்போ ஓட்டுநர் டூ ஏர்லைன்ஸ் ஓனர்!

கடினமாக உழைத்தால் டெம்போ ஓட்டுநர் கூட ஏர்லைன்ஸ் ஓனர் என்பதே ஷ்ரவன் குமாரின் வாழ்க்கை கதை. UP-ல், நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் டெம்போ ஓட்டி பிழைப்பு நடத்தியுள்ளார். 2014-ல் கனிமம், போக்குவரத்து துறையில் கவனம் செலுத்தி வெற்றிகண்டுள்ளார். இந்நிலையில் Shankh ஏர்லைன்ஸ் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. மேலும் சாமானியர்களுக்கு விமானப்பயணத்தை எளிதாக்குவதே தனது இலக்கு என்று அவர் கூறியுள்ளார்.


