News July 28, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 429 ▶குறள்: எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். ▶பொருள்: வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

Similar News

News March 3, 2026

JUST IN: சென்னையில் கோர விபத்து!

image

சென்னை: கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழக வாயிலில் இன்று(மார்ச் 3) அதிகாலை இரண்டு கார்கள் மோதி விபத்திற்குள்ளானன. இந்த விபத்தில், அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ஜூனு(21) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீசார் விசாரிக்கின்றனர். இதனால், அப்பகுதியில் தற்போது பரபரப்பு நிலவுகிறது.

News March 3, 2026

தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் கடந்த 2 நாள்களில் தங்கம் விலை உயர்ந்தது. ஆனால், இன்றைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $20 (இந்திய மதிப்பில் ₹1,831) குறைந்து $5,352.60-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $5 குறைந்து $90.36-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

News March 3, 2026

World Dosa day: தோசை உருவான வரலாறு தெரியுமா..?

image

வாரத்தில் 7 நாள் தோசை கொடுத்தாலும் சாப்பிடுவேன் என சொல்லும் ஆள்கள்தான் அதிகம். இன்று உலக தோசை தினம். சரியாக முதன்முதலில் எப்போது, எங்கு தோசை உருவானது என்ற எந்த தகவலும் இல்லை. ஆனால், சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலும் தோசை போன்ற ஒரு உணவின் குறிப்பு இடம்பெறுகிறது. அதே போல, 7-ம் நூற்றாண்டில் உடுப்பியின் கோயில் பகுதிகளில் தோசை உருவானதாக சொல்லப்படுகிறது. உங்களுக்கு பிடித்த தோசை வகையை கமெண்ட் பண்ணுங்க!

error: Content is protected !!