News March 30, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶ குறள் பால்: காமத்துப்பால் | ▶ இயல்: களவியல்
▶ அதிகாரம்: காதற்சிறப்புரைத்தல் ▶ எண்: 1105
▶குறள்:
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.
▶ பொருள்: ஒருவருக்கு விருப்பமான பொருள் ஒன்று, நாம் நினைக்கும் பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த என் காதலியை கட்டியணைக்கும்போது, அவளது தோள்கள் இன்பம் வழங்குகின்றன.

Similar News

News December 1, 2025

நடிகை சமந்தா – இயக்குநர் ராஜ் நிடிமொரு திருமணம் (PHOTOS)

image

நடிகை சமந்தா, பிரபல இயக்குநர் ராஜ் நிடிமொருவை காதலித்து வந்த நிலையில், இன்று காலை கோவையில் அவரை திருமணம் செய்து கொண்டார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற திருமண விழாவின் புகைப்படங்களை சமந்தா சற்றுமுன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஜோடிக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News December 1, 2025

ராஜ்யசபா புதிய உயரத்தை எட்டும்: தம்பிதுரை

image

ராஜ்யசபாவில் பேசிய அதிமுக MP தம்பிதுரை, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டார். மேலும், ‘உங்கள் தலைமைப்பண்பால் ராஜ்யசபா சிறந்த நாள்களை காணும் என நம்புகிறேன். அது, இந்தியாவை ஒரு புதிய உயரத்திற்கு அழைத்து செல்லும்’ என்று தெரிவித்தார். தொடர்ந்து, தமிழக பிரச்னைகளை பேச அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

News December 1, 2025

அண்ணாமலை கொடுக்கும் கல்யாண கிஃப்ட்டின் ரகசியம்?

image

அண்ணாமலை, தான் பங்கேற்கும் அனைத்து திருமணங்களிலும் ஒரே மாதிரியான கிஃப்ட்டை தான் கொடுக்கிறார். அது என்னவாக இருக்கும் என்றே பலரும் தேடி வருகின்றனர். திருமணம் மங்களகரமானது. இதனை வெளிப்படுத்தும் விதமாக, விவசாயிகளிடம் இருந்து மஞ்சளை நேரடியாக வாங்கி அதை பதப்படுத்தி, அரைத்து கண்ணாடி பாட்டிலில் அடைத்து பரிசளித்து வருகிறாராம். இந்த ஐடியாவும் நல்லா இருக்கே.. நாமளும் பாலோ பண்ணலாம்!

error: Content is protected !!