News June 28, 2024
தினம் ஒரு திருக்குறள்!

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: அவாவறுத்தல் ▶ குறள் எண்: 367 ▶குறள்: அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டு மாற்றான் வரும். ▶பொருள்: ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.
Similar News
News January 10, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 உயர்வு!

22 கேரட் தங்கம் இன்று(ஜன.10) கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹12,900-க்கு விற்பனையாகிறது. 8 கிராம் கொண்ட சவரன் ₹800 உயர்ந்து ₹1,03,200-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தில் இருப்பதால், இந்திய சந்தையில் கடந்த 2 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,200 அதிகரித்து மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளது.
News January 10, 2026
தேர்தல் களத்தை மாற்றுமா கூட்டணி முடிவுகள்?

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடாகி வரும் நிலையில், கூட்டணி முடிவுகளை இந்த மாதத்திற்குள் முக்கிய கட்சிகள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ராமதாஸ் தரப்பு முடிவில் வட தமிழக தேர்தல் முடிவும், தேமுதிகவின் முடிவில் சில தென் தமிழக பகுதிகளின் முடிவும் அமையும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். தவெக கூட்டணி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. யார் யாருடன் கூட்டணி வைக்கலாம்?
News January 10, 2026
2026 இல்லை.. இன்னும் 2018-ல் தான் இருக்காங்க!

உலகமே 2026-ம் ஆண்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், ஒரு நாடு மட்டும் இன்னும் 2018-லேயே இருக்கிறது. ஆம், எத்தியோப்பியாவில் கீஸ் நாள்காட்டி பின்பற்றப்படுவதால் அங்கு தற்போது 2018 தான். இந்த நாள்காட்டியில் 13 மாதங்கள் இருப்பதால்தான் எத்தியோப்பியா 7 ஆண்டுகள் பின் தங்கியுள்ளது. அதேபோல அங்கு செப்.11 அல்லது செப்.12-ல் தான் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. SHARE.


