News June 27, 2024
தினம் ஒரு திருக்குறள்!

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: அவாவறுத்தல் ▶ குறள் எண்: 366 ▶குறள்: அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா. ▶பொருள்: ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.
Similar News
News November 19, 2025
நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா.. PM-க்கு விவசாயிகள் கோரிக்கை

நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு PM மோடியிடம் தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இயற்கை வேளாண் மாநாட்டில் பேசிய பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர், விவசாயத்தில் புரட்சி செய்த நம்மாழ்வாருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று PM மோடியிடம் மேடையிலேயே வலியுறுத்தினர். இது, இயற்கை விவசாயத்தில் பல சாதனைகள் செய்த நம்மாழ்வாரை சிறப்பிக்கும் வகையில் அமைந்திடும் என்றும், அவர்கள் கூறினர்.
News November 19, 2025
BREAKING: தங்கம் விலை அதிரடி மாற்றம்

கடந்த 5 நாள்களாக குறைந்து வந்த 22 கேரட் தங்கத்தின் விலை இன்று (நவ.19) காலை, கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹11,500-க்கும், சவரனுக்கு ₹800 உயர்ந்து ₹92,000-க்கும் விற்பனையானது. இந்நிலையில், மீண்டும் கிராமுக்கு ₹100 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ₹11,600-க்கும், சவரன் 92,800-க்கும் விற்பனையாகிறது. ஒரேநாளில் ₹1,600 உயர்ந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News November 19, 2025
டெல்லி குண்டு வெடிப்பு: துருக்கி நிறுவனத்தில் ரெய்டு

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் துருக்கி நிறுவனங்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அதனால், உ.பி.யில் உள்ள இஸ்தான்புல் இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடட் எனும் அச்சகத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இன்று சோதனை செய்தனர். இந்தியாவுக்கு எதிரான வெறுப்பு பிரசுரங்கள் இங்கு அச்சடிக்கப்பட்டதாக தெரிகிறது. அங்கிருந்து CCTV வீடியோக்கள், முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


