News June 26, 2024
தினம் ஒரு திருக்குறள்!

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: அவாவறுத்தல் ▶ குறள் எண்: 365 ▶குறள்: அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர். ▶பொருள்: ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார். முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.
Similar News
News December 15, 2025
கில்லியின் சாதனையை முறியடிக்குமா படையப்பா?

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘படையப்பா’ திரைப்படம் தியேட்டர்களில் பட்டையை கிளப்பி வருகிறது. ‘படையப்பா’ படம் இதுவரை ₹4 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது. இதுவரை ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில், நடிகர் விஜய்யின் ‘கில்லி’ படம் அதிகபட்சமாக ₹10 கோடியை குவித்துள்ளது. அந்த சாதனையை விரைவில் ‘படையப்பா’ முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 15, 2025
SPORTS 360°: ஓடிசா மாஸ்டர்ஸில் உன்னதி, கிரண் சாம்பியன்

*மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் சென்னை மாணவி தங்கம் வென்றார். *ஒடிசா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டனில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் உன்னதி ஹூடாவும், ஆண்கள் பிரிவில் கிரண்ஜார்ஜும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
*38 அணிகள் பங்கேற்கும் சந்தோஷ் கோப்பைக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் இன்று தொடங்குகிறது.
News December 15, 2025
வரலாற்றில் இன்று

*1891 – ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
*1950 – இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் மறைந்தநாள்.
*1995 – ஈழத்தமிழருக்கு ஆதரவாக அப்துல் ரவூஃப் தீக்குளித்து இறந்தார்.
*1997 – தென் கிழக்கு ஆசியா அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டது.
*2013 – தெற்கு சூடானில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.


