News March 28, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶ குறள் பால்: காமத்துப்பால் | ▶ இயல்: கற்பியல்
▶ அதிகாரம்: ஊடலுவகை ▶ குறள் எண்: 1323
▶குறள்:
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
▶ பொருள்:
நிலத்தோடு மழைநீர் கலந்த பேரழகான காட்சியைப் போல பேரன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதால் வரும் இன்பத்தைவிட தேவருலகிலும் வேறொரு இன்பம் இருக்க வாய்ப்பில்லை.

Similar News

News March 24, 2026

பாஜக களமிறங்க விரும்பும் தொகுதிகள்

image

NDA கூட்டணியில் பாஜக போட்டியிட உள்ள 27 தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. சென்னையில் வேளச்சேரி, துறைமுகம், மயிலாப்பூர் தொகுதிகளை குறிவைத்துள்ளது. அத்துடன் கொங்குவில் திருச்செங்கோடு, அந்தியூர், திருப்பூர் தெற்கு, அரவக்குறிச்சி, ராசிபுரம், குன்னூர், மொடக்குறிச்சி, கோவை வடக்கு ஆகிய தொகுதிகளை பெற பாஜக விரும்பியுள்ளது. அதில் மதுரை தெற்கு, பத்மநாபபுரம், விளவங்கோடு ஆகிய தொகுதிகளும் உள்ளன.

News March 24, 2026

RR அணியை ₹15,290 கோடிக்கு வாங்கிய கல் சோமானி

image

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ₹15,290 கோடிக்கு அமெரிக்காவை சார்ந்த தொழிலதிபர் கல் சோமானி தலைமையிலான முதலீட்டாளர்கள் கூட்டமைப்பு வாங்கியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்ததும், ராஜஸ்தான் ராயல்ஸின் மொத்த உரிமமும் கல் சோமானியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதுகுறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

News March 24, 2026

விசிக கடந்து வந்த பாதை

image

மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ள போதிலும், தொடர்ந்து 2-வது முறையாக ஒற்றை இலக்க சீட்களிலேயே விசிக களம் காண்கிறது. சட்டப்பேரவை தேர்தல்களில் விசிக கடந்து வந்த பாதை: 2001 – 8(திமுக+), 2006 -9(அதிமுக+), 2011 – 10(திமுக+), 2016 – 25(மக்கள் நலக்கூட்டணி), 2021 – 6(திமுக+), 2026 – 8(திமுக+). இரட்டை இலக்க தொகுதிகளை விசிக எதிர்பார்த்த நிலையில் கூடுதலாக 2 சீட் கிடைத்துள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து?

error: Content is protected !!