News May 24, 2024
தினம் ஒரு திருக்குறள்!

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: வான்சிறப்பு ▶ எண்: 12
▶குறள்:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
▶பொருள்:
உண்பவருக்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோருக்குத் தானும் ஓர் உணவாகவும் ஆகி, அரிய தியாகத்தைச் செய்கிறது மழை.
Similar News
News March 27, 2026
2 சிட்டிங் தொகுதிகளை விட்டு கொடுத்த காங்கிரஸ்

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 23 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள 5 தொகுதிகளை உறுதி செய்ய திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் கடந்த தேர்தலில் காங்., வென்ற விருத்தாச்சலம், தென்காசியை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
News March 27, 2026
அமெரிக்கா விடுத்த கெடு.. உறுதியாக உள்ள ஈரான்

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஏப்ரல் 6-ம் தேதி வரை டிரம்ப் கெடு விதித்திருந்த நிலையில், அந்நாடு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேசமயம் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் செல்ல எந்த தடையும் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
News March 27, 2026
சிட்டிங் MLA-க்கள் 13 பேரை ஓரம் கட்டிய இபிஎஸ்

2021-ல் வென்ற 13 MLA-களுக்கு மீண்டும் போட்டியிட அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவிநாசி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால், EX சபாநாயகர் தனபாலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி -கோவிந்தசாமி, ஆரணி-ராமச்சந்திரன், வானூர்-சக்கரபாணி, சங்ககிரி – சுந்தர்ராஜன், திருப்பூர் வடக்கு-விஜயகுமார், மடத்துக்குளம்-மகேந்திரன் உள்ளிட்ட 13 பேருக்கு சீட் வழங்கப்படவில்லை. <<-se>>#TNElection2026<<>>


