News May 22, 2024
தினம் ஒரு திருக்குறள்!

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து
▶ எண்: 10
▶குறள்:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
▶பொருள்:
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் திருவடிகளை தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
Similar News
News November 20, 2025
விஜய்யுடன் கூட்டணி.. அறிவிப்பு வெளியானது

விஜய்யின் அரசியல் வருகையால், 2026 தேர்தல் களம் வழக்கத்திற்கு மாறான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், தவெக கைகோர்க்கவுள்ள கூட்டணி மீதும் அக்கட்சி தொண்டர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில், விரைவில் ‘CSK’ என்ற கட்சியை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ள கூல் சுரேஷ், நிச்சயமாக விஜய்யுடன் கூட்டணி அமைப்பேன் என உறுதிபட தெரிவித்துள்ளார். சுரேஷின் அறிவிப்பு குறித்து உங்கள் கருத்து என்ன?
News November 20, 2025
இந்த அதிசய பறவை பற்றி உங்களுக்கு தெரியுமா?

உலகில் Humming Bird-ஆல் மட்டுமே பின்நோக்கி பறக்கமுடியும். அதன் தனித்துவமான சிறகு அமைப்பு மற்றும் தோள்பட்டை எலும்புகள் இந்த அரிய திறனை வழங்குகின்றன. இதன் இறக்கைகள் மேல், கீழ் மட்டுமல்லாமல், 180 டிகிரி வரை சுற்றி சுற்றி சிறகடிப்பதால் இதனால் பின்நோக்கியும் பறக்கமுடிகிறது. மேலும், பறக்கும்போது, இதன் இறக்கைகள் விநாடிக்கு 80 முறை வேகமாக சிறகடிக்கிறதாம். இந்த பறவை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள SHARE.
News November 20, 2025
குழப்பத்தை ஏற்படுத்தும் ‘காலக்கெடு’

SC இன்று அளித்துள்ள <<18338011>>தீர்ப்பு<<>>, கவர்னருக்கு நிர்ணயித்திருந்த காலக்கெடுவை நீக்கி, ‘நியாயமான காலத்துக்குள்’ என மாற்றியுள்ளது. மேலும், மசோதாவை நிறுத்திவைக்க, முடிவெடுக்காமல் இருக்க(அ) திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரமுண்டு, ஆனால் காலவரையறையின்றி நிறுத்திவைக்கக் கூடாது என்கிறது தீர்ப்பு. ‘நியாயமான காலம்’ என்பது எத்தனை நாள்கள்? ‘காலவரையின்றி’ என்பதை எப்போது முடிவு செய்வது? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.


