News March 25, 2024
தினம் ஒரு திருக்குறள்!

*குறள் பால்: அறத்துப்பால் | இயல்: துறவறவியல்
*அதிகாரம்: அருளுடைமை | குறள் எண்: 241
*குறள்:
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
*பொருள்: மிகக் கொடிய உள்ளம் கொண்ட இழிவான எண்ணம் கொண்ட மக்களிடம் கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருள்செல்வத்துக்கு ஈடாகாது.
Similar News
News April 20, 2025
அதிமுகவுக்கே ராஜ்ஜியம்: ஆர்.பி.உதயகுமார்

2026 தேர்தலில் திமுகவுக்கு பூஜ்ஜியமும், அதிமுகவுக்கு ராஜ்ஜியமும் கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தோல்வியை சந்திக்கும் என CM ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், அவர் இந்த பதிலை கொடுத்துள்ளார். திமுகவால் இந்த கூட்டணியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
News April 20, 2025
ஆக்ரா, ஜெய்ப்பூர் செல்ல ஜே.டி.வான்ஸ் திட்டம்

இந்தியாவுக்கு நாளை குடும்பத்துடன் வரும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அக்ஷர்தாம் கோயில், தாஜ்மஹால் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறார். டெல்லி வந்திறங்கியதும் பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர், பிரதமர் அளிக்கும் விருந்தில் பங்கேற்றப் பின், இரவே ஜெயப்பூர் புறப்பட்டு செல்கிறார். அங்கு ராம்பாக் அரண்மனையில் குடும்பத்துடன் தங்கவுள்ளார்.
News April 20, 2025
தர்பூசணி வாங்கும் போது இதை கவனிங்க மக்களே..!

*தர்பூசணியை தட்டிப் பார்த்து வாங்கவும். கனமான சத்தம் வந்தால் அது நன்கு பழுத்து இனிப்புச் சுவையுடன் இருக்கும். *அதிக எடையுடன் கனமாக இருக்கும் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருக்கும். *நீளவாக்கில் உள்ள தர்பூசணியை விட உருண்டையாக இருக்கும் பழம் அதிக இனிப்புடன் சுவையாக இருக்கும். *தோல் அடர் பச்சை நிறத்தில் கடினமாக இருந்தால் அந்த தர்பூசணி பழுத்து இனிப்பாக இருக்கும். நோட் பண்ணீங்களா? ஷேர் பண்ணுங்க..!