News April 21, 2024
தினம் ஒரு திருக்குறள்!

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶குறள் எண்: 8 ▶குறள்: அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. ▶பொருள்: அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.
Similar News
News November 17, 2025
சத்தீஸ்கரில் 9 நக்சல்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரின் கோல்மால் பாட் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு போலீசாரும், பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியபோது, நக்சல்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்பும் மாறி மாறி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 9 நக்சல்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர்.
News November 17, 2025
அதிமுகவினருக்கு கொள்கைகள் எதுவும் தெரியாது: உதயநிதி

நாட்டில் சில தலைவர்கள், தங்களது தொண்டர்கள் அறிவாளிகளாக இருக்க வேண்டும் என விரும்பவில்லை என உதயநிதி தெரிவித்துள்ளார். உதாரணத்திற்கு அதிமுக தொண்டர்களுக்கு கொள்கைகள் எதுவுமே தெரியாது எனவும், திமுகவை எதிர்ப்பதுதான் அவர்களின் ஒற்றை நோக்கம் என்றும் விமர்சித்துள்ளார். தனது தொண்டர்களுக்கு எதுவும் தெரியக்கூடாது என EPS விரும்புவதாகவும் அவர் சாடியுள்ளார்.
News November 17, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


