News April 19, 2024
தினம் ஒரு திருக்குறள்!

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶குறள் எண்: 6
▶குறள்:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
▶பொருள்: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
Similar News
News January 17, 2026
நெருக்கமான காட்சிக்கு NO சொன்ன தமன்னா

நடிகை தமன்னா ஒரு நேர்காணலில், தனது திரை வாழ்க்கையின் தொடக்கத்தில் தான் சந்தித்த சிரமங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். மூத்த நடிகர்களுடன் நெருக்கமாக காதல் காட்சிகளில் நடிக்க கேட்டபோது, எனக்கு சங்கடமாக இருந்ததால் மறுத்துவிட்டேன். இதனால் இயக்குநர், கதாநாயகியை மாற்றுமாறு எனக்கு அழுத்தம் கொடுக்க முயன்றார். இருப்பினும், நான் சம்மதிக்கவில்லை. பின்னாளில் அவரே மன்னிப்பு கேட்டதாக நினைவு கூர்ந்துள்ளார்.
News January 17, 2026
ராசி பலன்கள் (17.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 17, 2026
CM ஸ்டாலின் வேங்கைவயலுக்கு செல்லாதது ஏன்?

குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் நடந்த வேங்கைவயலுக்கு CM ஸ்டாலின் செல்லாதது குறித்து ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார். ஒரு தனிமனிதனால் நிகழ்த்தப்பட்ட இந்த அநாகரிகத்துக்கு விசாரணை மட்டுமே ஒரே தீர்வு என கூறியுள்ளார். நிலச்சரிவு, பேரிடர் என்றால் CM நேரில் செல்லலாம், ஆனால் இந்த விவகாரத்தை அவர் கோட்டையில் இருந்தே (தலைமைச் செயலகம்) பார்க்கிறார் என தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?


