News April 9, 2025
RBI வட்டி குறைத்தாலும், வங்கிகள் குறைப்பதில்லை!

சாமி வரம் தந்தாலும், பூசாரி கருணை காட்டுவதில்லை என்ற நிலைப்பாட்டுடன் தான் வங்கிகளின் செயல்பாடு இருக்கின்றன. RBI வட்டியை குறைத்தாலும், பல வங்கிகள் குறைப்பதில்லை. இதனால், ரெப்போ வட்டி குறைப்பு சாமானிய மக்களை சென்றடைவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. பல வங்கிகள் வருமானத்தை ஈட்ட வட்டியை குறைப்பதில்லை எனவும் கூறப்படுகிறது. வங்கிகளால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் கமெண்ட் செய்யுங்கள்!
Similar News
News December 13, 2025
தொடரும் வேட்டை.. 10 மாவோயிஸ்ட்கள் சரண்

2026 மார்ச் 31-க்குள் நாட்டில் இருந்து மாவோயிஸ்ட்களை அகற்ற மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் விளைவாக, சத்தீஸ்கரில் நேற்று 6 பெண்கள் உள்பட 10 பேர் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்துள்ளனர். இவர்களைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ₹33 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த 11 மாதங்களில், சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் மட்டும் 1,514 பேர் சரணடைந்துள்ளனர்.
News December 13, 2025
இன்று இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. அதன்படி, தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் கூறியுள்ளது.
News December 13, 2025
வேட்பாளர் நேர்காணல்.. விஜய் பக்கா பிளான்

தை பொங்கலுக்கு வேட்பாளர் தேர்வு நேர்காணலை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனெவே 234 தொகுதிகளுக்கும் உத்தேச பட்டியலை தயார் செய்து, தொகுதிக்கு 4 பேர் வீதம் தேர்வு செய்து வைத்துள்ளாராம். அதில் 60% மாவட்ட செயலாளர்களுக்கு, பெண்களுக்கும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். மீதமுள்ள 40% தொகுதிகள் பிரபலங்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளதாக தவெகவினர் கூறுகின்றனர்.


