News December 5, 2024
பிளான் பண்ணி செஞ்சாலும், காட்டிக் கொடுத்த கூகுள் சர்ச்

மனைவி இறந்தபின் மறுமணம் செய்வது எப்படி? அதற்கு எவ்வளவு நாள் ஆகும்? இப்படி கூகுளில் தேடியவரை அமுக்கியுள்ளது அமெரிக்க போலீஸ். அமெரிக்காவில் வசிக்கும் நரேஷ் பட் என்பவரின் மனைவி 4 மாதங்களுக்கு முன் மாயமானார். இந்த கேஸில் குழம்பிக் கொண்டிருந்த போலீஸுக்கு, நரேஷின் கூகுள் சர்ச் க்ளூ கொடுக்க பிடிபட்டுள்ளார். எனினும், மனைவியின் உடல் கிடைக்காத நிலையில், அவரின் DNA உள்ள ரத்தத் தடயம் மட்டும் சிக்கியது.
Similar News
News November 26, 2025
மும்பை தாக்குதலில் 166 பேர் மரணம்.. தீராத சோகம்

இந்தியாவின் இதயத்தை கிழித்த 26/11 மும்பை தாக்குதல் நடந்த தினம் இன்று. 2008 நவம்பர் 26-ல், LeT அமைப்பை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கடல்வழியாக மும்பைக்குள் நுழைந்து CST ரயில் நிலையம் உள்பட பல இடங்களை கைப்பற்றினர். அவர்கள் நடத்திய தாக்குதலில் 166 பேரின் உயிர் அநியாயமாக பறிபோனது. 60 மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த தாக்குதலில், கடைசியில் அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டார்.
News November 26, 2025
சீனா விவகாரத்தில் மோடி பேசுவாரா? தமிமுன் அன்சாரி

அருணாச்சலப் பிரதேசத்தினரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது எனக்கூறி, இந்திய பெண் அலைக்கழிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். இது நம் இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்டிருக்கும் சவாலாகும். அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடி வரும் சீனாவுக்கு, நமது பதில் என்ன, இதுகுறித்து PM மோடி பேசுவாரா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாய் திறப்பாரா என கேள்வி எழுப்பினார்.
News November 26, 2025
விடுமுறை அறிவித்தார் கலெக்டர்

நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 1-ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது. அதனைதொடர்ந்து டிச.1-ம் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், நாகைக்கு தொடர்ந்து மூன்று நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும்.


