News February 25, 2025
தோனியே கேப்டனாக இருந்தாலும்.. சானா சாடல்

INDக்கு எதிரான போட்டிக்கான PAK அணியை அறிவித்த போதே, அந்த அணி தோல்வி அடைந்துவிட்டதாக PAK மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் சானா மிர் விமர்சித்துள்ளார். தோனி போன்ற தலைசிறந்த கேப்டனால் கூட இப்படி ஒரு அணியை வைத்து வெல்ல முடியாது எனவும், 2 பார்ட் டைம் பவுலர்களை வைத்து போட்டியை எதிர்கொண்டதே தவறு எனவும் அவர் சாடியுள்ளார். மேலும், PCB நிர்வாகத்தில் முழுமையான மாற்றம் தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 25, 2025
கனடா செல்லும் இந்தியர்களுக்கு சிக்கல்

கனடாவின் புதிய குடியுரிமை விதிகள் அங்கு வசிக்கும், செல்லும் பிற நாட்டினருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. புதிய விதிகளின் படி, இனி அதிகாரிகள் விசாக்களை ரத்து செய்ய முடியும். விசா காலம் முடிந்த பிறகும் ஒருவர் நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என அதிகாரி கருதினால், விசா காலம் முடியும் முன்னரே அவரது விசாவை ரத்து செய்யலாம். இதனால் அங்கு படிக்கும், வேலை செய்து வரும் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
News February 25, 2025
FACT CHECK: இந்த ₹500 நோட்டுகள் செல்லாதா?

நட்சத்திர சின்னம் (*) குறியீட்டுடன் கூடிய ₹500 நோட்டுகள் போலியானவை, அதனை வாங்க வேண்டாம் என சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவி வந்தன. இதுகுறித்து விளக்கமளித்த மத்திய அரசின் PIB FACT CHECK நிறுவனம், (*) குறியீட்டுடன் கூடிய ₹500 நோட்டுகள் செல்லும் எனவும், 2016ல் இருந்து இந்த நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாகவும், அவை போலியானவை இல்லை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளது.
News February 25, 2025
சீமானுக்கு ஆண்மை பரிசோதனை?

விஜயலட்சுமி தொடுத்த பாலியல் வழக்கில், சீமானிடம் ஆண்மை மற்றும் குரல் பரிசோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரிசோதனைகளைத் தொடர்ந்து அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும், சீமான் கைது செய்யப்படவே அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. வரும் 27ஆம் தேதி ஆஜராக சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.