News July 7, 2025

ஒரு துண்டும் மனதை மயக்கும்! இன்று உலக சாக்லெட் தினம்!

image

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் ஃபேவரிட்.. இன்று உலக சாக்லேட் தினம். என்ன கவலையாக இருந்தாலும், ஒரு கடியில் கரைந்து போகும். ஐரோப்பாவில் முதன்முதலில் சாக்லேட் அறிமுகப்படுத்தப்பட்ட நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜூலை 7-ம் தேதி சாக்லேட் தினமாக கொண்டாடப்படுகிறது. சாக்லேட்டின் சுவையை அனுபவிப்பதுடன் இன்று அன்பை வெளிப்படுத்தவும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. உங்களுக்கு பிடிச்ச சாக்லேட் எது?

Similar News

News July 7, 2025

சர்வதேச சந்தையில் தொடர்ந்து சரியும் தங்கம்!

image

சர்வதேச சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கியது முதலே தங்கம் விலை சரிந்து வருகிறது. பிற்பகல் 2.30 மணி நேர நிலவரப்படி 1 அவுன்ஸ்(28 கிராம்) 28 USD (இந்திய மதிப்பில் ₹2,408) குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இந்திய சந்தையில் இன்று சவரனுக்கு ₹400 விலை குறைந்ததை போல் நாளையும் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். எது எப்படியோ தங்கம் விலை குறைந்தால் மகிழ்ச்சி அதானே மக்களே?

News July 7, 2025

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வழக்கில் நாளை தீர்ப்பு

image

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் ஜாமின் கோரி கோர்ட்டை நாடினர். இந்த வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. தற்போது விசாரணை முடிவடைந்த நிலையில், அவர்களது ஜாமின் வழக்கில் நாளை தீர்ப்பளிக்கப்படும் என ஐகோர்ட் அறிவித்துள்ளது.

News July 7, 2025

Golden Memories ஹீரோ பேனாவின் இன்றைய விலை என்ன?

image

‘அவன் பணக்காரன்டா’ என்றதும், ‘எப்படி சொல்ற’ என மற்றொருவன் கேட்க, ‘ஹீரோ பேனாலாம் வச்சிருக்கான் பாரு’ என்ற இந்த உரையாடலை நம் வாழ்க்கையில் ஒருமுறையாவது அனுபவித்திருப்போம். அதிலும் ஹீரோ பேனாவின் தங்கம் போன்ற நிறத்திலான மூடி வெளியில் தெரியும்படி சட்டையில் வைத்திருப்பதே தனி கெத்து. இந்த பேனாவின் விலை தற்போது ஆன்லைனில் ₹200 – ₹600 வரையாக உள்ளது. நீங்கள் எவ்வளவு ரூபாய்க்கு இந்த பேனாவை வாங்கினீர்கள்?

error: Content is protected !!