News March 6, 2025
போர்க்களத்திலும் பூ பூக்கத்தானே செய்கிறது!

மேலே காணப்படும் இந்த போட்டோதான் இன்று உலகம் முழுவதும் வைரல். இஸ்ரேலின் தாக்குதலால் தவிடு பொடியான காசா பகுதியில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு திறந்த நிகழ்வுதான் இது. கட்டட இடிபாடுகளுக்கிடையே நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், பெரும்பாலான மக்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். இப்படியான காட்சிகளைப் பார்க்கும்போது மனம் கனத்துப் போகாமல் என்ன செய்யும்!
Similar News
News March 7, 2025
ஷமி பாவம் செய்துவிட்டார்: முஸ்லிம் மதகுரு

புனித ரமலான் மாதத்தில் நோன்பை கடைபிடிக்காமல் ஷமி பாவம் செய்துவிட்டதாக முஸ்லிம் மதகுரு மௌலானா சஹாபுதீன் ரஷ்வி குற்றஞ்சாட்டியுள்ளார். IND vs AUS போட்டியின் போது ஷமி கூல்டிரிங் குடித்தது சர்ச்சையான நிலையில், அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், பயணத்தில் இருக்கும் போது நோன்பை கடைபிடிப்பதில் குரானில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பல முஸ்லிம் தலைவர்கள் ஷமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
News March 7, 2025
இன்றைய (மார்ச் 7) நல்ல நேரம்

▶மார்ச்- 07 ▶மாசி – 23 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 09:00 AM – 10:00 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 03:00 PM – 04:30 PM ▶குளிகை: 07:30 AM- 09:00 AM ▶திதி: திதித்துவயம் ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: விசாகம் ▶நட்சத்திரம் : ரோகிணி.
News March 7, 2025
27 வயசுதான் வாழ்க்கையின் ஆரம்பம்: மணிகண்டன்

இன்றைய இளம் தலைமுறையினருக்கு நடிகர் மணிகண்டன் லைஃப் டைம் அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார். 27 வயசு வரைக்கும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுவோம். நிறைய கனவு காணுவோம். ஆனா, 27க்கு அப்புறம் வாழ்க்கை ஓங்கி ஒரு அறைவிட்டு, இதுதான்டா உன் வாழ்க்கை, இதுலதான் நீ வாழனும்னு சொல்லும். அப்போ லைஃப்பை பிடிச்சுக்கிட்டா நீ தப்பிச்சிருவ, அசால்ட்டா விட்டுட்டனா, வாழ்க்கை உன்னை விட்ரும் என மணிகண்டன் அறிவுரை கூறினார்.