News April 27, 2025
₹1,000 கோடியை கொட்டினாலும் அது ஈசி இல்லை: நானி

₹1,000 கோடி போட்டு படம் பண்ணினாலும், ‘மெய்யழகன்’ படத்தில் இருந்த அந்த உணர்வை திரையில் கடத்துவது அவ்வளவு எளிதல்ல என நடிகர் நானி தெரிவித்துள்ளார். இந்த படத்தை பார்த்ததும் ஆடிப்போய் விட்டதாகவும், நடிகர் கார்த்தியிடம் நிறைய பேசியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இயக்குநர் பிரேம் குமாரின் இந்த படைப்பு காலத்திற்கும் நிலைத்து நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 9, 2025
BREAKING: விஜய் கூட்டத்தில் போலீசார் தடியடி

புதுச்சேரியில் விஜய் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்தின் ஒரு பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்கும் சூழல் உருவானது. ஒரு பாஸுக்கு 2 பேருக்கு அனுமதி என தவெக நிர்வாகிகள் கூறியதாகவும், ஆனால் ஒரு பாஸுக்கு ஒருவருக்கு மட்டுமே அனுமதி என போலீசார் கூறியதால் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.
News December 9, 2025
BREAKING: தங்கம் விலை அதிரடியாக குறைந்தது

தங்கம் விலை இன்று(டிச.9) சவரனுக்கு ₹320 குறைந்துள்ளது. 22 கேரட் கிராமுக்கு ₹40 குறைந்து ₹12,000-க்கும், சவரன் ₹96,000-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹199-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ₹1,000 உயர்ந்து ₹1,99,000-க்கும் விற்பனையாகிறது.
News December 9, 2025
கவர்னர் மீண்டும் டெல்லி விசிட்!

கவர்னர் RN ரவி, மீண்டும் டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்துவிட்டு, நாளை சென்னை திரும்புகிறார். சித்த மருத்துவ பல்கலை., மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் நேற்று அனுப்பியிருந்தார். அடிக்கடி கவர்னர் டெல்லி சென்று வரும் நிலையிலும், திமுக அரசுடன் தொடர் மோதல் போக்கு நிலவிவரும் நிலையிலும், அவரது பயணம் கவனம் பெற்றுள்ளது.


