News February 16, 2025

ஹிட் கொடுத்தாலும் சான்ஸ் கிடைக்கல: ஐஸ்வர்யா

image

தெலுங்கில் நடித்த ‘சங்கராந்திக்கி வஸ்துனம்’ படம் பெரிய ஹிட் அடித்தாலும், தனக்கு இன்னும் ஒரு தெலுங்கு பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை என ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தனக்கு வாய்ப்பு வழங்க தெலுங்கு திரையுலகினரும், மக்களும் கால அவகாசம் எடுத்துக் கொள்வார்கள் என நினைப்பதாகவும், தான் கமர்ஷியல் ரக ஹீரோயின் கிடையாது என்பதால் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லையோ என தோன்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 6, 2026

ஜவுளித் துறையையும் விட்டு வைக்காத ஈரான் போர்!

image

போர் சூழல் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளிகள் மிகப்பெரிய அளவில் தேக்கம் அடைந்துள்ளன. இதையடுத்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று முதல் 50% உற்பத்தியை குறைக்க ஜவுளி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். நூல் விலை ஏற்றமும் உற்பத்தியை குறைப்பதற்கான காரணங்களில் ஒன்று என அவர்கள் கவலை தெரிவித்தனர்.

News April 6, 2026

BREAKING: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு

image

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசி நாளான இன்று மட்டும் 2,000 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும். மனுக்களை திரும்பப் பெற ஏப்.9-ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

News April 6, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,440 உயர்வு!

image

காலையில் சவரனுக்கு ₹1,120 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த 22 கேரட் <<19578408>>தங்கம் விலை<<>>, பிற்பகலில் ₹1,440 அதிகரித்து நடுத்தர மக்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் தற்போது 1 கிராம் ₹180 அதிகரித்து ₹13,990-க்கும், 1 சவரன் ₹1,11,920-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்தில் பெரும் சரிவை சந்தித்த தங்கம் விலை, ஏப்ரல் தொடங்கியதில் இருந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!