News March 10, 2025
PAKல் நடந்திருந்தாலும் INDதான் ஜெயித்திருக்கும்: அக்ரம்

CT தொடரை பாக். அல்லது எந்த நாட்டில் விளையாடி இருந்தாலும், IND தான் கோப்பையை வென்றிருக்கும் என முன்னாள் PAK வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். ஒரு போட்டியில் கூட தோற்காமல், T20 WC, CT தொடரை IND கைப்பற்றியது, அந்த அணியின் திறமை, தலைமைத்துவத்தை காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் NZ, AUSக்கு எதிரான டெஸ்ட்டில் தோற்ற போதும் கம்பீர், ரோஹித்துக்கு BCCI ஆதரவு அளித்ததையும் பாராட்டியுள்ளார்.
Similar News
News March 10, 2025
துபாயில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த காரணம் என்ன?

நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து தங்கம் கடத்தியது பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. தங்கம் கடத்த துபாயைத் தேர்வு செய்வது ஏன் தெரியுமா? அங்கு தங்கத்திற்கு எந்த வரியும் விதிக்கப்படுவதில்லை. இதனால், உலகின் தங்க விற்பனை மையமாக துபாய் திகழ்கிறது. மேலும், துபாயில் இந்தியாவை விட தங்கத்தின் விலை கிராமிற்கு 300 ரூபாய் வரை குறைவு. இதன் காரணமாகவே தங்கம் கடத்துபவர்கள் துபாயைத் தேர்வு செய்கின்றனர்.
News March 10, 2025
ரூ.1.93 லட்சம் கோடிக்கு நகை அடகு வைத்துள்ள TN பெண்கள்

தங்கம் மீது ஆசையில்லாத பெண்கள் இல்லை எனலாம். அதே தங்கம்தான் சில குடும்பங்களின் அவசர தேவைக்கும் உதவுகிறது. 2024 டிசம்பரில் எடுக்கப்பட்ட ஆய்வில் தமிழகப் பெண்கள் ரூ.1,93,249 கோடிக்கு நகை அடகு வைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், நாட்டிலேயே தமிழகப் பெண்கள்தான் நகை அடகு வைப்பதில் முதலாவதாக இருப்பதும், 2020 டிசம்பரில் இது ரூ.62,578 கோடியாக இருந்து பிறகு 3 மடங்கு அதிகரித்ததும் தெரிய வந்துள்ளது.
News March 10, 2025
BREAKING: X தளம் மீண்டும் முடங்கியது

உலகம் முழுவதும் X தளம் முடங்கியுள்ளதால் பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கோடி பேர் பயன்படுத்தும் குறுஞ்செய்தி தளமான X, தகவல் பரிமாற்றத்திற்காக பயன்பட்டு வருகிறது. இன்று மதியம் அது சில நிமிடங்கள் முடங்கிய நிலையில், தற்போது மீண்டும் முடங்கியிருக்கிறது. செய்தி பரிமாற்றத்தின் முக்கிய தளமாக இருக்கும் X முடங்கியிருப்பது தகவல் பரிமாற்றத்தை பாதித்துள்ளது.