News July 10, 2025

சோழர் காலத்திலும்.. இபிஎஸ்-க்கு சேகர்பாபு பதிலடி

image

இந்து சமய அறநிலையத்துறை (HRCE) கல்லூரிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களே பயில்வதாக சேகர்பாபு கூறியுள்ளார். பக்தர்களின் காணிக்கையைக் கொண்டு கல்லூரிகள் கட்டுவதா என இபிஎஸ் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், இதற்கு பதிலளித்த அமைச்சர், சோழர்கள் காலத்தில் கூட கோயில் சார்பில் கல்விச்சாலைகள் இருந்ததாக தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் 4 HRCE கல்லூரிகள் தொடங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

Similar News

News July 10, 2025

இபிஎஸ்ஸை மக்கள் ஏற்க மாட்டார்கள்: ஸ்டாலின்

image

இபிஎஸ்ஸை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூரில் நடந்த விழாவில் பேசிய அவர், தமிழ்நாட்டை தமிழ்நாடு என கூறக்கூடாது எனும் கூட்டத்துடன் அதிமுகவை இபிஎஸ் சேர்த்து விட்டார் என்று விமர்சித்தார். அதிமுகவை மீட்க முடியாத இபிஎஸ், தற்போது தமிழகத்தை மீட்கப் போவதாக கூறி, ஒரு பயணத்தை தொடங்கி இருப்பதாகவும் ஸ்டாலின் சாடினார்.

News July 10, 2025

சுட்டெரிக்கும் வெயில்… ஒரே வாரத்தில் 2,300 பேர் பலி

image

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஒரே வாரத்தில் 2,300 பேர் பலியாகியுள்ளனர். ஜூலை 2 வரை 10 நாள்கள் எடுக்கப்பட்ட புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெயில் அடித்ததாகவும், குறிப்பாக ஸ்பெயினில் 40 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் பார்சிலோனா, லண்டன் உள்ளிட்ட நகரங்களில் 2,300 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 10, 2025

மதிமுகவில் மீண்டும் பிளவு?

image

மதிமுகவை வைகோ ஆரம்பித்தபோது அவருடன் இருந்த மூத்த தலைவர்கள் எல்.கணேசன், செஞ்சி ராமசந்திரன், கண்ணப்பன் உள்ளிட்டோர் மதிமுகவில் இருந்து ஏற்கெனவே வெளியேறி விட்டனர். இதனால் மதிமுகவின் செல்வாக்கு பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மல்லை சத்யா மற்றும் துரை வைகோ இடையே மோதல் நீருபூத்த நெருப்பாக உள்ளது. மல்லை சத்யா வெளியேறினால், மீண்டும் அக்கட்சியில் பிளவு ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!