News March 5, 2025
படகோட்டிகள் கூட ₹30 கோடி வருமானம் ஈட்டினர்: யோகி

கும்பமேளாவில் ₹7,500 கோடி முதலீடு செய்து, ₹3 லட்சம் கோடியை அரசு வருமானமாக ஈட்டியதாக உ.பி. முதல்வர் யோகி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். படகோட்டிகள் கூட ₹30 கோடி வருமானம் ஈட்டியதாகவும், நாளொன்றுக்கு அவர்கள் ₹50,000- ₹52,000 வரை வருமானம் ஈட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆள்கடத்தல், பாலியல் தொல்லை, திருட்டு, கொலை என ஏதாவது ஒரு குற்றத்தை காட்ட முடியுமா எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
Similar News
News March 6, 2025
மாணவனை காப்பாற்ற போய், உயிரை விட்ட ஆசிரியர்

ஓசூர் அருகே நீரில் மூழ்கிய 3 ஆம் வகுப்பு மாணவரை காப்பாற்றச் சென்ற தலைமையாசிரியரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விளைநிலத்தில் பள்ளம் தோண்டி தண்ணீர் சேமிக்கப்பட்டிருந்தது. இதில் 3 ஆம் வகுப்பு மாணவர் நித்தின் தவறி விழ, அவரை காப்பாற்றச் சென்ற தலைமையாசிரியர் கெளரிசங்கரும் நீரில் மூழ்கி தத்தளித்தார். பக்கத்தில் யாரும் இல்லாததால் நீரில் தத்தளித்தபடி 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.
News March 6, 2025
தினமும் பீர் குடிப்பவரா நீங்கள்?

மது அளவாக தான் குடிப்பேன் என சொல்பவர்களுக்கு கூட உடலில் சிறு பிரச்சனைகள் வரும். சிலர் பீர் அடித்தால் எந்த பிரச்னையும் வராது என கூறுவதை கேட்க முடியும். ஆனால் தினமும் 2 பீர் குடித்ததால் மூளை 10 ஆண்டுகள் முதிர்ச்சியடையும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதேபோல் துரித உணவுகளும் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சொல்லப்படுகிறது. ஒருநாளைக்கு எத்தனை பீர் நீங்க அடிக்குறீங்க?
News March 6, 2025
நியூசி.,க்கு பயத்தை காட்டிய ‘Killer Miller’

2nd Semi-Finalலில் NZ வெற்றி பெற்றாலும், SAவின் டேவிட் மில்லரின் அதிரடி பேட்டிங்கை பார்த்து மிரண்டு போனது. தொடக்க வீரர்களின் விக்கெட்டை NZ எடுத்தாலும், மில்லரின் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. எந்த பக்கம் போட்டாலும் SIX, FOURஆக பறக்கவிட்டார். அதுவும் கடைசி 3 ஓவர்கள் அவர் அடித்த ஒவ்வொன்றும் அடியும் இடியாக இருந்தது. அவர் 67 பந்துகளில் 4 SIX, 10 FOUR உடன் சதம் விளாசினார்.