News October 23, 2024
100 முறை பார்த்தாலும் பிரமிக்க வைக்கும் கங்குவா

கங்குவா படத்தின் ஒவ்வொரு சீனையும் 100 முறைக்குமேல் பார்த்துவிட்டேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், அதன் தாக்கம் அதிகரித்தபடி உள்ளது என பாடலாசிரியர் மதன் கார்கி பாராட்டியுள்ளார். அவர் தன் X பதிவில், காட்சிகளின் பிரமாண்டம், கலையின் நுணுக்கம், ஆழமான கதை மற்றும் கம்பீரமான இசை இவற்றுடன் சூரியாவின் பவர்ஹவுஸ் பெர்ஃபாமன்ஸும் இணைந்து, இப்படத்தை மிகச்சிறந்த படைப்பாக மாற்றியுள்ளதாக புகழ்ந்துள்ளார்.
Similar News
News December 19, 2025
பெரம்பலூர்: ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை!

பேங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் காலியாக உள்ள Credit Officers பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 514
3. வயது: 25-40
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 05.01.2026
7. மேலும் அறிந்துகொள்ள: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க…
News December 19, 2025
2 ஆண்டு சிறை தண்டனை.. அமைச்சர் ராஜினாமா

மோசடி வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற மகாராஷ்டிர அமைச்சர் மாணிக்ராவ் கோகடே தனது பதவியை ராஜினாமா செய்தார். தேசியவாத காங்கிரஸை சேர்ந்த இவர் விளையாட்டு, இளைஞர் நலன் துறைகளின் அமைச்சராக இருந்தார். 1989 – 1992 காலகட்டத்தில் ₹30,000-க்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கான திட்டத்தில், போலி ஆவணங்கள் மூலம் அப்ளை செய்ததே தற்போது பதவி பறிபோக காரணமாக அமைந்துள்ளது.
News December 19, 2025
Review: எப்படி இருக்கிறது அவதார் Fire & Ash?

அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் தன் கூட்டத்தை, மங்குவான் ரைடர்ஸ் கூட்டத்திடமிருந்து ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை. பிளஸ்: திரையில் வரும் ஒவ்வொரு காட்சியும் புல்லரிக்க வைக்கும். குறிப்பாக, படத்தின் கடைசி ஒருமணி நேரம், கற்பனைக்கும் எட்டாத பிரமிப்பை கொடுக்கின்றது. கண்டிப்பாக 3D அல்லது IMAX திரையில் பாருங்க! பல்ப்ஸ்: முதல் பாதியில் ஓவர் பேச்சு, வீச்சே இல்லை. Rating: .2.25/5.


