News August 7, 2024
இந்திய தூதரக ஊழியர்கள் வெளியேற்றம்

வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக அங்குள்ள தூதரக ஊழியர்களை இந்தியா வெளியேற்றியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து அங்கு குறைந்த எண்ணிக்கையிலான அதிகாரிகள், இந்திய உயர் ஆணையத்துடன் இணைந்து பணியாற்றுவதாக கூறப்படுகிறது. வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங், ராஜ்ஷாஹி, குல்னா மற்றும் சில்ஹெட் போன்ற நகரங்களில் இந்திய தூதரகங்கள் உள்ளது.
Similar News
News December 13, 2025
திருவள்ளூர்: G Pay பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 13, 2025
BREAKING: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினர்

பிக்பாஸில் இந்த வாரம் இரண்டு பேர் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. FJ, கம்ருதீன், ரம்யா ஜோ, சபரிநாதன், சாண்ட்ரா, கானா விநோத், வியானா உள்ளிட்டோர் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் குறைந்த வாக்குகளை பெற்றதால் ரம்யா ஜோ, சாண்ட்ரா எலிமினேட் ஆகியுள்ளனர். வீட்டில் விதிகளை மீறிய விஜே பார்வதி, கம்ருதீனையும் விஜய் சேதுபதி கடுமையாக எச்சரித்திருக்கிறார்.
News December 13, 2025
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 30 தொகுதிகளா?

கடந்த 2021 தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆனால், கடந்த முறையை விட சுமார் 30 தொகுதிகள் கூடுதலாக கேட்டு பாஜக, டிமாண்ட் வைத்ததாக பேச்சு அடிபட்டது. இந்நிலையில், 50 தொகுதிகள் தர முடியாது என்பதில் உறுதியாக இருக்கும் EPS, 30 தொகுதிகள் வரை ஒதுக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். டெல்லிக்கு விரைந்துள்ள நயினார், அமித்ஷாவிடம் இதுகுறித்து ஆலோசனை செய்யவிருக்கிறாராம்.


