News April 1, 2025

தெருநாய்களை கருணைக் கொலை செய்யுங்க: அன்புமணி

image

ஆபத்தான தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ரேபிஸால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை அடையாளம் கண்டு அப்புறப்படுத்த வேண்டும் எனவும், 70% தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதே இதற்கு தீர்வாக இருக்கும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News December 8, 2025

திருவள்ளூர்: இளம்பெண் பரிதாப பலி!

image

திருவள்ளூர்: மாதவரம் அருகே லாரி மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வழக்கம்போல் பணி முடிந்து, நேற்று முன்தினம் இரவு தன் ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மஞ்சம்பாக்கம் அருகே சென்றபோது, பின்னால் வந்த டேங்கர் லாரி சிவரஞ்சனியின் ஸ்கூட்டரில் மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட அவர், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News December 8, 2025

OPS உடன் டெல்லி போட்ட டீல் ஓகே ஆனதா?

image

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த OPS, கையோடு ஒரு டீல் பேசிவந்ததாக தகவல் கசிந்துள்ளது. OPS-ஐ தங்களது அணியில் சேர்க்க விரும்பும் டெல்லி பாஜக, NDA கூட்டணிக்கு வந்தால் அவர் தொடங்கும் புதிய கட்சிக்கு 5 சீட்களை ஒதுக்குகிறோம் என டீல் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்த ஆலோசனையில் OPS இறங்கியிருக்கிறாராம். எனவே, டிச.15 இதுபற்றி Official தகவல் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

News December 8, 2025

சற்றுமுன்: விலை ₹1000 குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லாத நிலையில், வெள்ளி விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ₹1 குறைந்து ₹198-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை சரிவை சந்தித்துள்ளதால், நம்மூரில் வரும் நாள்களில் விலை மேலும் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!