News May 22, 2024

ராம ராஜ்யம் நிறுவப்படுவதை தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங்

image

இந்தியாவில் ராம ராஜ்யம் நிறுவப்படுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பொகாரோ பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடியின் தலைமையில் உலகின் வலிமையான நாடாக அனைத்து துறைகளிலும் இந்தியா உருவெடுத்துள்ளது. பாஜக ஆட்சியில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அனைத்து வங்கிகளும் பெரும் லாபத்தை பதிவு செய்துள்ளன என்றார்.

Similar News

News August 17, 2025

51-வது வயதில் பிரபல நடிகைக்கு 2-வது திருமணம்?

image

நடிகை மலைக்கா அரோரா தனது 2-வது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார். தான் மிகவும் ரொமான்டிக் எனவும் தனக்கு காதல் மீது நம்பிக்கை இருப்பதாகவும், ‘So never say never’ என தெரிவித்தார். 51 வயதான மலைக்கா, 1998-ல் அர்பாஸ் கானை திருமணம் செய்து கொண்டு, 2017-ல் விவாகரத்து பெற்றார். 2018-ல் அவர் நடிகர் அர்ஜுன் கபூரை டேட்டிங் செய்ததாகவும் கூறப்பட்டது. இவர் தமிழில் ‘தையா தையா’ பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

News August 17, 2025

அன்புமணியை நீக்க தயாராகும் ராமதாஸ்?

image

பாமக பொதுக்குழுவில் அன்புமணிக்கு எதிரான 16 குற்றச்சாட்டுகளை ராமதாஸ் உருவாக்கிய ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கையாக அளித்துள்ளது. >ராமதாஸின் தைலாபுர வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டது>நாள்தோறும் ராமதாஸ் குறித்து அவதூறு பரப்பினார்>பாமக அலுவலகத்தை திட்டமிட்டு வேறு இடத்திற்கு மாற்றினார்> ராமதாஸிடம் அனுமதி பெறாமல் உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது

News August 17, 2025

கூட்டணி குறித்து ராமதாஸே முடிவெடுப்பார்

image

2026 தேர்தலில் பாமக அதிக இடங்களில் வெற்றி பெறும் நோக்கில், கூட்டணியை முடிவு செய்ய ராமதாஸுக்கே முழு அதிகாரமும் வழங்கி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பாமகவில் புதிய விதி 35 உருவாக்கப்பட்டு, இதன்படி எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் கூட்டணி, வேட்பாளர்கள் குறித்து ராமதாஸே முடிவெடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!