News March 18, 2024
ஈரோடு: ரூ.1 லட்சம் பறிமுதல் செய்த அதிகாரிகள்

அந்தியூர் அருகே புதுப்பாளையம் படவே காட்டூர் பகுதியில் தேர்தல் அதிகாரி முத்து மற்றும் போக்குவரத்து போலீசார் மாதேஸ்வரன் கொண்ட குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது பூலாம்பட்டியை சேர்ந்த ராஜா(22) என்பவர் தனது லாரியில் ரூபாய் 1,02,750 எடுத்து சென்றார். அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News September 13, 2025
ஈரோட்டில் நண்பன் மனைவியுடன் தகாத உறவு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே கோட்டை புதூர் சேர்ந்தவர் நல்லசாமி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி குழந்தைகள் உள்ளனர். இவரது நண்பரான சந்திரனுக்கும் நல்ல சாமியின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படும் நிலையில் இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சந்திரனின் தலையில் கல்லை போட்டு நல்லசாமி கொலை செய்தார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்த நல்ல சாமியை போலீசார் கைது செய்தனர்.
News September 13, 2025
ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் 146 காலியிடங்கள்

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் ஈ.சி.ஜி, அவசரப் பிரிவு, சுவாச சிகிச்சை, டயாலிசிஸ், மயக்கவியல் துறை, அறுவை அரங்கு டெக்னீசியன், எலும்பு முறிவுத்துறை போன்ற படிப்புகளுக்கு 146 இடங்கள் காலியாக உள்ளது. இதில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்ப படிவத்தை ஈரோடு மருத்துவக் கல்லூரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News September 13, 2025
சென்னிமலை அருகே பஞ்சுமில் தீப்பிடித்து எரிந்து நாசம்

சென்னிமலை டவுன் அம்மாபாளையம் பகுதியில் வசிப்பவர் சண்முகசுந்தரம் இவருக்கு சொந்தமான நூல் மில் சென்னிமலை , முருங்கத்தொழுவு ஊராட்சி தண்ணீர் பந்தலில் உள்ளது. இங்கு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கப்படுகிறது. நேற்று மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு மில் முழுவதும் மல மல தீ பரவியது. உடனடியாக சென்னிமலை தீ அணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் தீ அணைக்கும் முன்பே எரிந்து விட்டது.