News March 17, 2024
ஈரோடு: வட மாநில வாலிபர் சடலம் கண்டெடுப்பு

ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அங்கு, இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் நிர்வாணமாக இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த ஈரோடு சூரம்பட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அடித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 3, 2025
ஈரோடு: 108 ஆம்புலன்சில் வேலை வாய்ப்பு முகாம் !

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள டி.பி. ஹாலில் செப்.7-ம் தேதி 108 ஆம்புலன்சில் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கு மாத ஊதியம் ரூ.21120 வழங்கப்படுகிறது. மேலும், தகவலுக்கு, 73388 94971 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News September 3, 2025
பிளாஸ்டிக்கிற்கு குட்பை சொன்னால் பரிசு நிச்சயம்!

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் மக்கும் தன்மை கொண்ட பொருட்களை மட்டும் பயன்படுத்தி வரும் உணவகங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெரிய சிறிய என 2 உணவகங்களுக்கு பரிசுத்தொகையுடன் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கு உரிமம் பெற்ற உணவக உரிமையாளர்கள் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
News September 3, 2025
ஈரோடு: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை வாய்ப்பு!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <